பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபாவுவின் பல லட்சம் அடங்கிய வங்கி கணக்கு முடக்கம்..!இவரா இப்படி..!

0
479
- Advertisement -

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் நடித்த படங்கள் ரீ மேக் செய்யப்பட்டு வேறு மொழிகளிலும் ஹிட் அடித்துள்ளது. அவ்வளவு ஏன் நம்ம விஜய் கூட இவரது ரீ மேக் படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகளை முடக்கி, ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விடயம் தற்போது டோலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

நடிகர் மகேஷ்பாபு சேவை வரி செலுத்தாமல் இருந்தார். 2007-08ம் ஆண்டில் அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரிபாக்கிவைத்துள்ளார். சேவை வரி செலுத்தும்படி அவருக்கு ஜி.எஸ்.டி. ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியபடி இருந்தது. ஆனால் நோட்டீசுகளுக்கு நடிகர் மகேஷ்பாபு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதயடுத்து
ரூ.73.5 லட்சம் பணத்தை சேமிப்பில் வைத்திருந்த 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

-விளம்பரம்-
Advertisement