பொன்னியின் செல்வன் படத்தை பாகுபலியுடன் ஒப்பிட்டு கேலி செய்ய துவங்கிய தெலுங்கு ரசிகர்கள் – தமிழ் ரசிகர்களின் பதிலடி.

0
1013
ponniyinselvan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : தனுஷின் ப்ளூ டிக்கை நீக்கிய ட்விட்டர் நிறுவனம், அதிர்ச்சியில் ரசிகர்கள் – இது தான் பின்னணி

பொன்னியின் செல்வன் படம்:

மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது.

-விளம்பரம்-

படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்:

இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படி மிகப் பெரிய ஜாம்பவான்கள் மொத்தம் இந்த படத்தில் பணியாற்றி இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், படத்தில் சுந்தரசோழன் – சரத்குமார், ஆதித்த கரிகாலன்- விக்ரம், வந்தியதேவன் – கார்த்திக், நந்தினி- ஐஸ்வர்யா ராய், குந்தவை- திரிஷா, அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி நடித்து இருக்கிறார்கள்.அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி இருந்தது

கேலி செய்யும் தெலுகு ரசிகர்கள் :

இப்படி ஒரு நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பாகுபலியுடன் ஒப்பிட்டு தெலுகு ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனைகளை செய்தது. தெலுங்கில் வெளியான முதல் பிரம்மாண்ட படம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்த படம் Pan இந்திய அளவில் வெற்றி பெற்றது.

Pan இந்தியா பஞ்சாயத்து :

பாகுபலி படத்திற்கு பின்னரே பல தெலுகு படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டனர். அதிலும் குறிப்பாக புஷ்பா, ஆர் ஆர் ஆர் போன்ற படங்களும் நேரடியாக தமிழிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. RRR படம் வெளியானதில் இருந்தே தமிழில் Pan இந்திய அளவில் படம் இல்லை என்று பலர் கேலி செய்தனர். ஆனால், சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழகத்தில் புஷ்பா, ஆர் ஆர் ஆர், பாகுபலி போன்ற படங்களில் வசூல் சாதனையை முறியடித்தது.

தமிழ் ரசிகர்கள் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் தான் பொன்னியின் செல்வன் படமும் pan இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. படு பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று Pan இந்திய அளவில் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தெலுகு ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பாகுபலியுடன் ஒப்பிட்டு கேலி செய்து வருகின்றனர். இதற்கு தமிழ் ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement