தூக்கில் தொங்கிய பிரபல சீரியல் நடிகை.! நடிகர்கள் ஷாக்.! அதிர்ச்சி பின்னணி.!

0
441
Naga Jhansi

கடந்த சில காலமாக திரைதுறையில் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் நடிகர்களை விட நடிகைகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடந்தேறி வருகிறது. அந்த வகையில் பிரபல தெலுங்கு சீரியல் நடிகை நாக ஜான்சி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தெலுங்கில் டிவி தொடர்கள் சிலவற்றில் நடித்துள்ள ஜான்சி, கடந்த சில மாதங்களாக போதிய வாய்ப்பு இல்லாததால் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். ஐதராபாத்தில் அவர் தனியாக வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை அவரது வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் துர்கா பிரசாத் பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.

பிறகு அவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து பார்த்து போது, வீட்டிற்குள் ஜான்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் ஜான்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர். 

ஜான்சி, தூரத்து உறவினரான இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக, கடந்த சில நாட்களாக ஜான்சி மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து ஜான்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜான்சியின் மொபைல் போனையும் கைப்பற்றி, அதில் உள்ள தகவல்களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.