கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மௌன ராகம் சீரியல் நடிகை.

0
16734
srivani
- Advertisement -

சமீபகாலமாகவே சின்னத்திரை நடிகர் நடிகைகளின் தற்கொலை சம்பவம் மிகவும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான ஸ்ரவாணி தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தவர் ஸ்ரவானி. இவர் கடந்த 8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.நேற்று இரவு ஐதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

-விளம்பரம்-
Popular TV actress dies by suicide due to harassment!

அவரது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரவானியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் தடைசெய்யப்பட்ட டிக்டாக் ஆப் மூலம் அறிமுகமான தேவராஜ் ரெட்டி என்ற நபர் தனது சகோதரி ஸ்ரவானியிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக அவரது சகோதரர் ஷிவா கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.

- Advertisement -

தனது சகோதரியின் மரணத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துள்ள ஸ்ரீரவாணி யின் சகோதரர் சிவா கூறுகையில் ‘ புதன்கிழமை அவருக்கு சூட்டிங் இருப்பதால் அவர் குளிப்பதற்காக கழிவறைக்கு சென்று தாப்பாள் போட்டு கொண்டார். அந்த சமையம் என்னுடைய அம்மா சமையல் வேலையில் இருந்தார். 15 நிமிடம் கழித்து அவள் வெளியில் வரவில்லை. பின்னர் எனக்கு சந்தேகம் ஏற்பட என்னுடைய சகோதரியின் நண்பரை அழைத்து பாத்ரூம் கதவை திறந்தபோது எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும், தேவராஜ் என்பவர் நீண்ட நாளாக டார்ச்சர் செய்து வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே என்னுடைய சகோதரி 30000 மற்றும் 80,000 என்று இரண்டு முறை பணம் கொடுத்திருக்கிறார். என்னுடைய சகோதரியின் தவறான புகைப்படங்களை காட்டி அவர் மிரட்டி பணம் பறித்துள்ளார். இதேபோலத்தான் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தன்னை அவன் மிகவும் டார்ச்சர் செய்வதாகவும் கூறி இருந்தாள். நிச்சயம் அவர் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாள் என்று கூறியுள்ளார் ஸ்ரவானியின் சகோதரர் சிவா.

-விளம்பரம்-

Advertisement