விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே இந்தி,மலையாளம், தெலுகு என்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அணைத்து மொழி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் டால்க் ஆப் தி டௌனாக மாறியுள்ளது.
தமிழில் இரண்டு சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று துவங்க இருக்கிறது. இதில் தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் என் டி ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள்.
இதையும் படியுங்க : மியா ஜார்ஜ்ஜா இது.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!
தற்போது தெலுங்கு பிக் பாஸின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் தேர்வும் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபல தெலுங்கு நடிகர் சுனிலிடம் பிக் பாஸ் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதாக தெலுங்கு வட்டாரத்தில் ஒரு செய்து வெளியாகியுள்ளது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு வாரத்திற்கு 25 லட்ச ரூபாய் சுனில் சமதளமாக கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிக் பாஸ் குழுவினர் திணறியுள்ளனர்.
இங்கு சந்தானம் எப்படியோ அப்படி தான் தெலுங்கு சினிமா துறையில் சுனில். ஆரம்ப காலத்தில் காமெடி நடிகராக நடித்து வந்த சுனில் அதன் பின்னர் கதாநாயகனாக மாறிவிட்டார். அதற்காக தனது உடலை படு பிட்டாக மாற்றி முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்தார் சுனில். ஆனால், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.