சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘காலா ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இன்று (ஜூன் 7) உலகமெங்கும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் காலா படத்தில் அப்படி என்ன சிறப்பு, ஏன் காலா படத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரு 10 கூறுகளை தற்போது காணலாம்.

Advertisement

1. ரஜினி படம்: இதன் முதல் காரணமே இது ஒரு ரஜினி படம் என்பது தான். ரஜினி என்னதான் அரசியிலில் ஈடுபட்டு ஒரு சில எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருக்கலாம். ஆனால் ஒரு நடிகனாய், ரஜினிக்கு சிறியவர் முதல் [பெரியவர் வரை ரசிகர்கள் இருக்கிறாரகள். ரஜினி படம் என்றாலே ஒரு மாஸ் தான்.

2. ரஞ்சித் – ரஜினி இணை- இயக்குனர் ரஞ்சித் மற்றும் ரஜினி இணையும் இரண்டாவது கூட்டணி இந்த படம், இதற்கு முன்னர் இவர்கள் இருவர் கூட்டணியில் வெளிவந்த ‘கபாலி’ படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு பெற்றது என்பது நீங்கள் அறிந்த ஒரு விடயம் தான்.

Advertisement

3. ஒண்டர் பார் தயாரிப்பு(தனுஷ்) :சூப்பர் ஸ்டார் நடித்துள்ள இந்த படத்தை, நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷின் ஒண்டர் பார் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அதனால் தனுஷின் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

4. அரசியல் எதிர்பார்ப்பு :- ரஜினி அரசியலுக்கு வர போகிறார் என்று பல ஆண்டு காலமாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் அரசியலில் ஈடுபட போவதாக சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிவித்திருந்தார். அவர் அரசியல் அறிவிப்பை அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் இது தான்.

5. எதிர்ப்புகளை சந்தித்த படம்:- ரஜினி அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், இந்த படத்திற்கு பல்வேறு அரசியல் சாயம் பூசப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் தலைப்பை தொடங்கி, கர்நாடகாவில் இந்த படம் சந்தித்த பல எதிர்ப்புகள் வரை இந்த படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது.

6. சக நடிகர்கள்:- பொதுவாக இயக்குனர் ரஞ்சித் எல்லா படங்களிலும், அவரின் முந்தய படத்தில் நடித்த ஒரு சில நடிகர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். மேலும் இந்த படத்தில் கூடுதலாக சமுத்திரக்கனி, ஈஸ்வரிராவ் , ஹூமா குரேஷிநானா படேகர் என்று பல நடிகர் பட்டாளமே உள்ளது. இதனால் இவர்களின் கதாபாத்திரங்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

7. படத்தின் இசை:- இந்த படத்தின் இசையை இயக்குனர் ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ரஞ்சித் இயக்கிய அனைத்து படத்திற்கும் இசையமைத்த சந்தோஷ், இந்த படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசையை தெறிக்கவிட்டுள்ளார்.

8. படத்தின் செட்:- இயக்குனர் ரஞ்சித்தின் படம் அனைத்துமே குப்பம் சார்ந்த கதையாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதையாகவும் தான் இருக்கும். அதற்கு ஏற்றார் போல படத்தின் செட்களையும் அமைப்பார். இந்த படத்தின் கதை மும்பை தாராவியில் நடப்பது போல காட்சியாக்கபட்டுள்ளளது. அதற்காக 800க்கும் பெறப்பட்ட கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு சென்னை பூவிருந்தவல்லி அருகே பல நூறு ஏக்கரில் தாராவி போன்றே செட் ஒன்றை அமைத்துள்ளனர்.

9. தணிக்கை சான்றிதழ். பொதுவாக ரஜினி படங்கள் அனைத்தும் குடும்பங்களும் பார்க்கும் படம் என்பதால், பெரும்பாலான ரஜினி படம் ‘யூ’ தணிக்கை சான்றிதழ் தான் பெற்றிருந்தது. ஆனால் ‘தளபதி’ படத்திற்கு பிறகு, அதாவது 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்துக்கு ‘யு/எ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

10.படத்தின் கதை:- ரஜினி நடித்த பல தாதா கதைகள் அனைத்தும் படு ஹிட்டாகி இருக்கிறது. உதாரணமாக “பாட்ஷா ,தளபதி ” போன்ற படங்களை கூறலாம். ‘கபாலி’ படத்திற்கு பிறகு இந்த படமும் ஒரு கேங்க்ஸ்டர் படம் என்பதால் இந்த படமும் ஒரு ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement