தெலுங்கில் ரீமேக் ஆகும் தெறி படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா

0
1195
vijay - theri

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான தெரி படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதே போல அந்த படம் விஜய்க்கு ஒரு நல்ல திருப்பமாக அமைந்தது.

teri

பெரும்பாலும் விஜய் படங்கள் அனைத்தும் தெலுங்கில் இருந்து ரீ மேக் செய்யப்பட்ட படங்களாகவே அமைந்திருந்து.விஜய் நடித்த கில்லி, போக்கிரி போன்ற அனைத்து மெகா ஹிட் படங்களும் தெலுங்கில் இருந்துதான் ரீ மேக் செய்யப்பட்டது மேலும் தெலுங்கு ரீ மேக் கில் விஜய் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் ஹிட் டா னது. தெலுகு சினிமாவை தமிழில் டப் செய்யும் பழக்கம் மாறி தற்போது தமிழ் சினிமாவை தெலுங்கில் டப் செய்யும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் அதிகமாக பரவி வருகின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படம் விஜய்க்கு நல்ல திருப்பமாக அமைந்ததோடு அந்த ஆண்டின் சிறந்த படம் என்ற பெயரையும் அந்த படம் பெற்றது.

ravi teja

இந்நிலையில் தெறி படத்தை தெலுங்கு மொழியில் ரீ மேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்  பவன் கல்யாண் தான் முதலில் இதில் நடிப்பார் என்று எதிர் பார்க்கபட்டது ஆனால் அவர் தற்போது வேறு சில படங்களில் பிஸியாக நடித்துவருவதால் தெறி படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் தற்போது ரவிதேஜா தான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.