மலையாள திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘ஒட்ட நாணயம்’. இந்த படத்தினை இயக்குநர் சுரேஷ் கண்ணன் இயக்கியிருந்தார். இதில் டினு டென்னிஸ், ப்ரியாமணி, ஹரிஸ்ரீ அசோகன், முக்தா, சலீம் குமார் ஆகியோர் கதையின் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது தான் நடிகை முக்தா அறிமுகமான முதல் மலையாள திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் ‘அச்சன் உறங்காத வீடு’ என்ற படத்தில் நடித்தார் நடிகை முக்தா.
அதன் பிறகு மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை முக்தா, அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். தமிழில் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘தாமிரபரணி’. இது தான் நடிகை முக்தா தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹரி இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக விஷால் நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. தமிழ் திரையுலகிற்காக முக்தா தனது பெயரை பானு என மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ‘தாமிரபரணி’ படத்துக்கு பிறகு தமிழில் ‘ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, பாம்பு சட்டை’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் முக்தா.
மேலும், மலையாளம் மற்றும் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார் முக்தா. 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி நடிகை முக்தா, ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கியாரா என்ற மகள் உள்ளார். உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இது வெள்ளித்திரைக்கு மற்றும் இன்றி சின்னத்திரைக்கும் பொருந்தும். சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த லாக் டவுன் டைமில் தனது மகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக நடிகை முக்தா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்.