‘மெர்சல்’ சாதனையை வீழ்த்தியது ‘தானா சேர்ந்த கூட்டம்’ – முதலிடம் பிடித்த சூர்யா !

0
2541
- Advertisement -

மெர்சல் படத்தின் சாதனையை வீழ்த்தி அதனை கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். சூர்யா ஹீரோவாக நடித்து விக்னேஷ் சிவன் இயக்கிய படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி சூரியா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் பின்னர் படத்தின் பார்ஸ்ட் லுக் ஒன்று வெளியிடப்பட்டது. சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானவுடன் சூரியா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, லைக் மற்றும் ரீ-ட்வீட்கள் பறந்தன.

-விளம்பரம்-

இந்த ரீ-ட்வீட்களால் ஒரு சாதனையை படைத்துள்ளது தானா சேர்ந்த கூட்டம். அதாவது, இந்தியாவில் அதிக அளவில் ரீ-ட்வீட் செய்யப்பட்ட பர்ஸ்ட் லுக் இது தான் என ட்விட்டர் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதனால், இதற்கு முன் இருந்த மெர்சல் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது தானா சேர்ந்த கூட்டம். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றாலும், இதுவரை 70 லட்சம் வியூக்களை மட்டுமே கடந்துள்ளதும். இந்த 70 லட்சம் வியூவை, மெர்சல் டீசர் வந்த அரை மணி நேரத்தில் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement