தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் ? விவரம் உள்ளே

0
1592
thana-serntha-kootam-movie

சூரியா-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ஹிந்தியில் வெளிவந்த ஸ்பெஷல்-26 படத்தின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது.

thana serntha kootam

மேலும், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமைய்யா, செந்தில், ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். படம் நேற்று 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தமிழ் மற்றும் தெலுங்கில் சூர்யாவிற்கு நல்ல ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

அதேபோல் வெளிநாடுகளில் அமெரிக்காவில் சூர்யாவிற்கு வரவேற்பு அதிகம். இவருடைய 24 என்கிற படம் அமெரிக்கவில் மட்டும் 1.5 மில்லியன் டாலர் வரை வசூல் செய்திருந்தது. இதனால் தற்போது வெளியாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைபடமும் நல்ல வசூல் செய்யும் என்பதில் ஐயமில்லை.

தற்போது வெளிநாடுகளில் வைக்கப்பட்ட முதல் நாள் ப்ரீமியர் ஷோவில் மட்டும் 30 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.