நிகழ்ச்சி மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தாடி பாலாஜி ! காரணம் இதுதான் !

0
2897
thadi-balaji

தாடி பாலாஜி பல படங்களில் காமெடியனாக நடித்தவர். பெரும்பாலும் வடிவேலுடன் துணை காமெடி நடிகராக நடித்து வந்தவர். தற்போது ஒரு சில படங்களிலும் நடித்து வந்தாலும் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற ஷோவில் ஜட்ஜ்’ஆக இருந்து வருகிறார்.
balajiகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் இவரது மனைவி நித்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரிய பிரச்சனை ஆனது. அவர்கள் சம்மந்தமாக சில வீடியோக்கள் எல்லாம் வெளியாகி பெரும் சர்ச்சை உருவாகியது. இவர்கள் இருவருக்கும் போர்சியா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

இந்த பிரச்சனையால் இவர்களை விட அந்த குழந்தை தான் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கும் என்பது உண்மை. சமீபத்தில் குழந்தைகள் பங்கேற்கும் கிங்ஸ் ஆப் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்ற தாடி பாலாஜி கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் அசத்திய குழந்தைகளை பாராட்டிய தாடி பலாஜிக்கு அவரது குழந்தை போர்சியா நியாபகம் வந்துவிட்டது. இதன் காரணமாக மேடையிலேயே அழுதுவிட்ட பாலாஜி தற்போது என் குழந்தையை ரொம்பவும் மிஸ் செய்கிறேன் எனக் கூறி மன வருத்தம் கொண்டார்.