தல 59 படத்தின் நடிகையை உறுதி செய்த போனி கபூர்.! அவரே வெளியிட்ட தகவல்.!

0
458
Thala59

‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கவுள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கான கதாபாத்திரத்திற்கான தேர்வு படு மும்மரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நஸ்ரியா, இயக்குனர் ஆத்விக், பிரபல செய்தி தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே பிரபல கமிட் ஆகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிங்க் படத்தின் ரீமேக் என்பதும் நாம் அனைவரும் அறிவோம். அந்த படத்தில் அமிதாப் பச்சன் ஒரு வழக்கரிஞராகவும் அவருடன் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரமும் நடித்திருப்பார்கள்.

அந்த மூன்று பெண்களில் ஒருவராக நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளர் என்று ஏற்கனேவே தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.