தல அஜித் பத்தி பொய்யான செய்திக்கே இப்படியா..? விஜய் ரசிகர்களுக்கு மாஸ் என நிரூபித்த தல ரசிகர்கள்

0
323

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி வரும் படம் “விஸ்வாசம் “. அடுத்த ஆண்டு பொங்கல் திருநாள் அன்று வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

தமிழ், தெலுகு, மலையாளம் என்று பல்வேறு மாநிலங்களில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் ஆந்திராவில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னை கேரளா போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது.

அதே போல “விஸ்வாசம் ” படத்தில் தம்பி அஜித் கதாபாத்திரம் கிராமத்தில் வாழும் நபர் என்பதால் தற்போது பல்வேறு கிராம பகுதிகளில் படபிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் தங்களது கிராமத்தில் அஜித் வர மாட்டாரா என்று ஏங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அஜித் கேரளா எல்லைக்கு உட்பட்ட பள்ளிகொண்டா சுங்கசாவடி வழியாக வேலூருக்கு செல்கிறார் என்ற ஒரு பொய்யான செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில்நேற்று இரவு தீயாக பரவியது.

ajithkumar

இதனால் பள்ளிகொண்டா சுங்கசாவடி அருகில் அஜித்தை காண பல்வேறு ரசிகர்கள் திரண்டனர். ஆனால், அஜித் வருவது வதந்தி என்று தெரிந்த பின்னர் ஏமாற்றமுடன் திருப்பினார். இருப்பினும் அஜித் வருகிறார் என்ற ஒரு வதந்த்திக்கே இதனை ரசிகர்கள் இரவு வேலையில் மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருந்தது அஜித் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தியுள்ளது.