மகளின் சாதனைக்காக நடிப்பை விட்ட தலைவாசல் விஜய் – தந்தையின் ஆசையை நிறைவேற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள மகள்.

0
410
thalaivasal
- Advertisement -

தன் மகளை சினிமாவில் அறிமுகம் செய்து வைக்காமல் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விளையாட்டு வீராங்கனையாக வளர்த்து இருக்கிறார் பிரபல நடிகர் தலைவாசல் விஜய். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் தலைவாசல் விஜய். இவர் திரைப் பட நடிகர் மட்டுமல்லாமல் குரல் ஒலிச்சேர்க்கை கலைஞரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் சினிமா உலகில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த “தலைவாசல்” என்ற படத்தில் தான் முதன் முதலாக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு பிறகு தான் இவரை ‘தலைவாசல் விஜய்’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இவர் தன்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சினிமா படங்களில் நடிகர், குணச்சித்திர நடிகர், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அதோடு தலைவாசல் விஜய் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ‘கவலைப்படாதே சகோதரா’ என்ற பாடல் தான்.

- Advertisement -

தலைவாசல் விஜய் திரைப்பயணம்:

இந்த பாடல் இன்னும் ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் இடம் பிடித்து இருக்கிறது. மேலும், நடிகர் தலைவாசல் விஜய் அவர்கள் கடைசியாக 100% காதல் என்ற திரைப் படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘அழகு’ சீரியலில் நடித்து இருந்தார். இந்நிலையில் தலைவாசல் விஜய்யின் மகள் நீச்சல் போட்டியில் தங்கம் பெற்று இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைவாசல் விஜய் மகள்:

தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா. இவர் நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் சிறு வயதிலிருந்தே நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று இருக்கிறார். நேபால் தலை நகரமான காத்மாண்டுவில் 13வது தெற்காசிய போட்டி நடை பெற்றது. இந்த போட்டியில் பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி இருந்தார்கள். இந்தியா சார்பில் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணாவும் நீச்சல் போட்டியில் பங்கேற்று விளையாடி இருந்தார். இந்த போட்டியை பார்பதற்காக தலைவாசல் விஜய் அவர்கள் நேபால் சென்று இருந்தார்.

-விளம்பரம்-

நீச்சல் போட்டியில் வென்ற மகள்:

இந்த போட்டியில் ஜெயவீனா அவர்கள் 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோரக் பிரிவின் வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாவது இடத்தை பெற்று இருந்தார். தலைவாசல் விஜய் தன் மகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும், இவருடைய 15 வயதில் கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் நீச்சல் பிரிவில் தங்கம் வென்ற அசத்தியிருந்தார். 50 மீட்டர் தொலைவை 34.43 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து இருந்தார். தனது மகளின் வெற்றி குறித்து தலைவாசல் விஜய் கூறியிருந்தது,

மகளின் வெற்றி குறித்து தலைவாசல் விஜய் கூறியது:

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதிலிருந்தே மகளுடன் தான் இருக்கிறேன். அவள் தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்காக இருந்தது. இதற்கான அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்துவிட்டேன். இதற்கு முன் கடந்த 2012ஆம் ஆண்டு ராஞ்சியில் நடந்த தேசிய போட்டியில் ஜெயவீனா ஒரு வெள்ளி ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்று இருந்தார். அப்போது எனது மகள் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போது நனவாகி உள்ளது. இனி அடுத்த இலக்கு சர்வதேச அளவிலான போட்டியில் பதக்கம் வெல்வதே என்று கூறி இருந்தார்.

Advertisement