தலைநகரம் பட நடிகையா இது ! இப்படி மாறிட்டாங்க -புகைப்படம் உள்ளே !

0
11740
Actress joythimai

2006 இல் வெளியான இயக்குனர் சுந்தர் சி நடிகராக அவதாரமெடுத்த படம் தலைநகரம்.அந்த படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஜோதிர்மையி.கேரளாவில் பிறந்த இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரு பிரபல மலையாள தொலைகட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

Actress-Jyothirmayi

பின்ன பைலோட்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார்.அதன் பின்னரே தமிழில் தலைநகரம் படத்தில் நடித்தார் அந்த படத்திற்கு பின்னர் விஜயகாந்த் நடித்த சபரி,நான் அவன் இல்லை,வெடிகுண்டு முருகேசன் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் தமிழ் ரசிகர்களிடம் சரியான வரவேற்பு கிடைக்காததால் திரும்பவும் தனது சொந்த மண்னான கேரளாவிற்கு சென்று அங்கே ஒரு சில ஆண்டுகள் படங்களில் நடித்தார்.

2004 இல் நிஷாந் குமார் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வந்ததால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முறையான விவகாரத்தை பெற்றுக் கொண்டனர்.

joythami

Jyothirmayi

அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு அமல் நீரத் என்ற மலையாள திரைப்பட இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்வாகவே இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.அமல் நீரத் மம்முட்டி ,பிரிதிவிராஜ் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை எடுத்துள்ளார்.

Jyothirmayi-Actress

yothimai

2013 பிறகு தனது சினிமா வாழ்க்கையை மூட்டை கட்டிவிட்டு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிர் மையி தற்போது தனது இரண்டாவது கணவர் அமல் நீரத்துடன் குடும்ப பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.