ராகினி நந்த்வாணி, 1989 ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடுனில் பிறந்தார். 2005 ஆம் ஆண்டு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி தொடரில் சிறு வேடத்தில் நடித்து தனது கலை பயணத்தை தொடங்கினார்.
அதன் பின்னர் இவருக்கு 2011 ஆம் ஆண்டு பிரபல ஜீ இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரபான "கௌஷிக் கி பாஞ்ச பஹுயின் " என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடர் இந்தி ரசிகர்களிடையே பெரும் ஹிட்டாக மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றார் நடிகை ராகினிநந்த்வாணி. அந்த தொடரில் நடித்ததன் மூலம் இவருக்கு இந்தியில் 2013 ஆம் ஆண்டு வெளியான "டேராடுன் டைரி " என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
அதே ஆண்டில் தலைவா படத்திலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னனர் மலையாளம்,மராத்தி போன்ற மொழிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் மீண்டும் சீரியலில் நடிக்க சென்றுவிட்டார்.




