இவங்கெல்லாம் ஜெயலலிதாவானு கேட்டாங்க. ஆனால், பர்ஸ்ட் போஸ்டரை பாருங்க.

0
4056
thalaivi
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே சினிமாவில் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க சில இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது அந்த படத்திற்கான பணிகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாகி வருகிறது. ஏ எல் விஜய் இயக்கி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணவ்த் நடிக்கிறார். இவர், தமிழில் ஜெயம் ரவி நடித்ததாம் தூம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்காக நடிகை கங்கனா தமிழ் மொழியை கூட கற்று வருகிறார்.

- Advertisement -

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாவிற்க்கும் மோதல் ஏற்பட்டபோது எம் ஜி ஆரை எம், ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருந்தது.

This image has an empty alt attribute; its file name is image-73.png

-விளம்பரம்-

அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை கங்கனா ரனாவத் அச்சு அசலாக ஜெயலலிதா போலவே கண்டு பலரும் வியந்து போய்யுள்ளார்கள். இந்த படத்தில் கங்கனா ரனாவத் கமிட் ஆன போது, இவேறெல்லாம் எப்படி ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று பலரும் விமர்சித்தனர். ஆனால், இந்த பர்ஸ்ட் லுக்கை கண்டு பலரும் வாயடைத்து போய்யுள்ளனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement