பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் உருவான ‘சித்து +2’ படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். சித்து +2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவினாலும் நடிகை சாந்தினிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. சித்து +2 படத்திற்கு பின்னர் இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.
மேலும் அரவிந்த்சாமியின் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாந்தினிக்கும் அவரது காதலரும், நடன இயக்குநருமான நந்தாவுக்கும் இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
9 வருடங்களாக காதலித்த வந்த நிலையில் நடிகை சாந்தினி இடையில் கற்பமானதால் இரு குடும்பத்தினரும் அவசர அவசரமாக இந்த திருமண ஏற்பாட்டை செய்துள்ளனர் என்ற சில கிசுகிசுக்களும் உலாவி வருகிறது. திருமணத்திற்குப் பின்னர் கூட தொடர்ந்து நடித்து வந்தார் சாந்தினி. சொல்லப்போனால் இந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார். மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தாழம்பூ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல நடிகை சாந்தினி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் தற்போது விஜய் டிவியில் தொடரில் நடிகையாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் சாந்தினி அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடிகை சாந்தினி உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான ஆடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்