இதுவரை எந்த நடிகையும் இப்படி ஒரு வேடத்தில் நடித்தது இல்லை – தளபதி 65 பட நடிகை பூஜா (அப்படி என்ன ரோல் பாருங்களேன் )

0
3203
pooja
- Advertisement -

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

-விளம்பரம்-
Telugu is a difficult language: Pooja Hegde

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து வருண் தேஜின் ‘முகுந்தா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே.

இதையும் பாருங்க : கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும் – கமலுக்கு மோகன் கொடுத்த டிப். (ஆண்டவருக்கே அட்வைஸா)

- Advertisement -

தெலுங்கு திரையுலகுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த பூஜா ஹெக்டே, அடுத்ததாக பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்தார். ‘இந்தி, தெலுங்கு என்று பிசியாக நடித்து வரும் பூஜா சமீபத்தில் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.தற்போது இவர் தான் தளபதி 65 படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது தென்னிந்திய மொழிகளில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது.எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம்

This image has an empty alt attribute; its file name is pooja.jpeg

தளபதி 65 தொடர்ந்து இவர் தெலுங்கில் பிரபாசுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம், அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்தில் இதுவரை எந்த கதாநாயகிகளும் நடித்திராத, ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம் பூஜா ஹெக்டே. ஸ்டாண்ட் அப் காமெடி செய்பவராக இந்தப்படத்தில் நடித்து உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement