அண்ணே 400-அ மறந்துடாதீங்க – ‘பீஸ்ட்’ பர்ஸ்ட் லுக் குறித்து எஸ் கே போட்ட பதிவு. என்ன சொல்ல வராரு தெரியுதா ?

0
6609
sk
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிட்டு இருக்கிறது சன் பிச்சர்ஸ் நிறுவனம்.

- Advertisement -

இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கில தலைப்பை வைத்துள்ளனர். பீஸ்ட் என்றால் அசுரத்தனமான பெரிய மிருகம் என்று ஆங்கிலத்தில் அர்த்தப்படுகிறது. அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து பல பிரபலங்களும் கமன்ட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நெல்சனுக்கும், நாளை பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்து, நெல்சன் அண்ணா, 400 மறந்துடாதீங்க என்று பதிவிட்டுள்ளார். அதாவது இந்த படம் 400 கோடி வசூல் பெற வேண்டும் என்பதை தான் சிவகார்த்திகேயன் அப்படி குறிப்பிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர.

-விளம்பரம்-
Advertisement