சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.
ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு வீடியோ மூலமாக வெளியிட்டு இருந்தனர்.
இதையும் பாருங்க : விசா கிடைக்க வேண்டும் என்று வெளிநாட்டு நடிகரை திருமணம் செய்த ராதிகா ஆப்தே. இவர் தான் அவர் கணவர்.
இந்த படத்தை இயக்க இருக்கும் நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. இதனை சன் பிக்சர்ஸ்ஸே அறிவித்துவிட்டது.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வடபழனியில் நடைபெற இருக்கிறது.
அதே போல் வருகிற ஜூன் 21 ஆம் தேதி நெல்சனின் பிறந்தநாள். அதற்கு அடுத்த நாளான ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் தளபதி 65 படத்தின் டபுள் அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் பிறந்தநாளான ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.