விசா கிடைக்க வேண்டும் என்று வெளிநாட்டு நடிகரை திருமணம் செய்த ராதிகா ஆப்தே. இவர் தான் அவர் கணவர்.

0
1431
radhika
- Advertisement -

பாலிவுட் நடிகைகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அவர்களில் ராதிகா ஆப்தேவும் ஒருவர். தமிழில் ‘தோனி’ திரைபடத்தில் அறிமுகம் ஆனார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.அதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்துள்ளார் ராதிகா அப்டே. தமிழில் பரிட்சயமான நடிகை இல்லை என்றாலும் இந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is rathika-apte.jpg

இவரது அந்தரங்க புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. அதே போல ஒரு படத்தில் நிர்வாண காட்சியிலும் நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். பலரும் இவரை திருமணம் ஆகாதவர் என்று தான் நினைத்து இருந்தார்கள். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது என்ற செய்தி கடந்த 2019 ஆம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவரது கணவர் வெளிநாட்டை சேர்ந்த ஒரு நடிகர் தான்.

இதையும் பாருங்க : பரோட்டா மாஸ்டர் டு லண்டன் கேங்ஸ்டர் – எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்.

- Advertisement -

அதனை ராதிகா ஆப்டேவே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருந்தார். இதுகுறித்து பேசிய அவர், எனக்கும் திருமணத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டால் சுலபமாக விசா கிடைத்துவிடும் என்று தான் திருமணம் செய்து கொண்டேன். நானும், பெனடிக்கும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது.

This image has an empty alt attribute; its file name is rathika-aptee.jpg

நானும், எனது கணவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்துள்ளோம். எங்களுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தகராறுகள் வருவதுண்டு. ஆனாலும் அவை சிறிது நேரம்தான் இருக்கும். இருவரும் சண்டை போட்டால் சிறிது நேரத்திலேயே பேசிவிடுவோம். இதுவரை நானும் சரி அவரும் சரி ஒருவரை ஒருவர் விட்டுகொடுத்து தான் வாழ்ந்து வருகிறோம்.எனக்கு திருமணம் ஆனதை மறைக்க வேண்டும் என்று எண்ணம் இல்லை. அதை வெளியில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை அவ்வளவு தான் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement