சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.
ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிட்டு இருக்கிறது சன் பிச்சர்ஸ் நிறுவனம்.
இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கில தலைப்பை வைத்துள்ளனர். பீஸ்ட் என்றால் அசுரத்தனமான பெரிய மிருகம் என்று ஆங்கிலத்தில் அர்த்தப்படுகிறது. அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர். இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என ஐந்து நேரடி ஆங்கில தலைப்புகளில் நடித்துள்ளார்.
விஜயின் 65வது திரைப்படத்தின் பெயர் டார்கெட் என பொதுவாக ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவி வந்த நிலையில் பீஸ்ட் என்ற பெயரை மிகவும் ரகசியமாக வைத்து படக்குழுவினர் தற்போது அதனை வெளியிட்டுள்ளனர். இன்று (ஜூன் 21) நெல்சன் பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாக இருக்கிறது.