சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.
ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
இதையும் பாருங்க : கோவில், ரத்தத்தில் கடிதம், திருமண டார்ச்சர் – சின்னத்தம்பி படத்தால் குஷ்வூவிற்கு ஏற்பட்ட அன்புத் தொல்லைகள்.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் (மார்ச் 31) துவங்கிஇருந்தது. அந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தலில் வாக்களித்த அடுத்த நாள் விஜய் ஜார்ஜியா பறந்தார்.
சமீபத்தில் நடிகர் விஜய் ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் கூட சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் படப்பிடிப்பில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் அவ்வப்போது மழை பெய்வதால் படத்தின் காட்சிகளை எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நாளில் ஓரிரு காட்சிகளை மட்டுமே படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர் என்று படக்குழு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.