விஜய் 65 படத்தில் இணைந்த மலையாள நடிகர் – அட, இவர் 9 ஆண்டு அவர்கிட்ட அசிஸ்டன்டா வேலை செஞ்சவராம்.

0
827
vijay65
- Advertisement -

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

-விளம்பரம்-
Image

இப்படி ஒரு நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 9ஆண்டுகள் இயக்குநர் கமலிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷைன் டாம் சாக்கோ 2011ஆம் ஆண்டு வெளியான ‘காடம்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஈ அடுத்த காலத்து’, ‘அன்னையும் ரசூலும்’, ‘சாப்டர்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : சொன்னதை போலவே உடல் எடையை குறைத்து பிகினி உடையில் காட்சியளித்த கிரண்.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க இந்த படத்தின் பூஜையில் இரண்டு இரட்டையர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் யார் என்று சிலர் அறிந்திருப்பார்கள். ஆனால், பலருக்கு இந்த இரண்ட்டையர்கள் யார் என்பது தெரிய வாய்ப்பில்லை. இவர்கள் வேறு யாரும் இல்லை தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு மற்றும் அறிவு என்பவர்கள் தான். தேசிய விருது பெற்ற இந்த இரட்டையர்கள் தான் ஆக்ஷனில் தெறிக்கவிட்ட KGF மற்றும் KGf 2 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியவர்கள்.

shine-tom-chacko-onboard-in-thalapathy-65

மேலும், தமிழில் மெட்ராஸ், கபாலி, கைதி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளனர். தளபதி 65 படத்திற்குப் பிறகு கே.ஜி.எப் படத்தின் சண்டைக் காட்சியை ரசிகர்கள் மறந்து விடுவார்கள் என்றும் அந்தளவுக்கு விஜய்யின் தளபதி 65 படம் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்றும், அன்பறிவ் குழுவில் இடம்பெற்றுள்ள திலீப் குமார் என்பவர் பேசிய வீடியோ ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement