பூஜா ஹெட்ஜை தொடர்ந்து தளபதி 65 படத்தில் கமிட் ஆனதை உறுதி செய்த நடிகை – இவர் தான் இரண்டாம் ஹீரோயினா (அப்போ ராஷ்மிகா இல்லையா)

0
1131
vijay65
- Advertisement -

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் தனது 65 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

இந்த படத்தின் பூஜை நேற்று (மார்ச் 31) சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி பூஜா ஹேக்டே கலந்துகொள்ளவில்லை. நேற்று முதலே இந்த படத்தின் பூஜை புகைப்படங்களும் வீடியோகளும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், படக்குழுவில் பணிபுரியும் பிரபலங்கள் யார் யார் என்று ரசிகர்கள் ஆராய துவங்கிவிட்டனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பூஜா ஹேக்டேவை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் நாயகியாக ராஷ்மிகா மந்தனா கமிட் ஆனதாக தகவல்கள் வெளியானது. ஆனால் , அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.மேலும் , ராஷ்மிகா இந்த படத்தின் பூஜையில் கூட காணவில்லை. அவ்வளவு ஏன் இந்த படத்தின் நாயகியான பூஜா ஹேக்டே கூட கலந்துகொள்ளவில்லை. ஆனால் இந்த படத்தின் பூஜையில் வேறு ஒரு நடிகை கலந்து கொண்டார்.

அது வேறு யாரும் இல்லை மலையாள நடிகை அபர்ணா தாஸ் மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தளபதி 65 படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். ‘தளபதி 65’ எனும் மிகப்பெரிய படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என பூஜை படத்துடன் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அறிமுகமவே விஜய் படம் என்பதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம் அபர்ணா.ஆனால் அவரும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement