ஜார்ஜியா ரசிகருக்கு விஜய் போட்டுள்ள ஆட்டோகிராப் – பல ஆண்டு பழக்கத்தை மாற்றிவிட்டாரே. என்ன தெரியுமா ?

0
2166
Vijay
- Advertisement -

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

ஆனால், அந்த படத்தின் வாய்ப்பை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தட்டி சென்றார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதில் ராஷ்மிகா மற்றும் பூஜா ஹேகடே்வின் பெயர்கள் அதிகமாக அடிபட்டது. இவர்கள் இருவர் பெயரும் மாஸ்டர் படத்தின் போதே விஜய்க்கு ஜோடி போடும் லிஸ்டில் அடிபட்டது. சம்பளப் பிரச்னை காரணமாக இழுபறி நீடித்துவந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே நடிக்கிறார் .

இதையும் பாருங்க : ‘விட்றாதீங்க எப்போவ்’ கர்ணன் படத்தை பார்த்துவிட்டு காஜல் போட்ட பதிவு – யாருடன் போய் இருக்காங்க பாருங்க.

- Advertisement -

ஆனால், இந்த படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் துவங்கியது. இதற்காக விஜய் உட்பட படக்குழுவினர் சென்றனர். ஜார்ஜியாவிற்கு சென்ற விஜய்க்கு ரசிகர்கள் பலர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதே போல ஜார்ஜ்ஜியாவில் இருந்த ரசிகர் ஒருவர் விஜய்யிடம் வாங்கிய ஆட்டோகிராப் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வித் லவ் விஜய் என்று ஆட்டோகிராப் போட்டுள்ளார். தளபதி விஜய் அவர்கள் எப்போதும் தான் போடும் ஆட்டோகிராப்பை “பிரியமுடன் விஜய்” என்று தான் போடுவார். அதற்கு காரணம் அவர் நடித்த 19 வது படமான பிரியமுடன் தான். பிரியமுடன் படத்தில் நடித்ததில் இருந்து தான் இவர் தன்னுடைய ஆட்டோகிராப்பை பிரியமுடன் விஜய் என்று போடுகிறார். விஜயின் கையெழுத்து மட்டும் இல்ல அவரது மனதிற்கும் நெருக்கமான படமாக இந்த படம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement