தளபதி 67 படத்தில் கெளதம் மேனன், மிஸ்கின் ஒரு நாள் நடிக்க இவ்வளவு சம்பளமா?

0
538
- Advertisement -

விஜய் நடிக்கும் தளபதி 67 தற்போது உருவாக்கி வரும் நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான மிஷ்கின் மற்றும் கௌதம் மேனனுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றன்ர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இந்த நிலையில் தான் படத்தின் டைட்டில் இன்று வெளியாகியது.

- Advertisement -

தளபதி 67

கை மற்றும் உடல் முழுவதும் ரத்தம் தெறிக்க விஜய் காட்சி அளிக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டு இந்த படத்தின் அப்டேட் குறித்து நேற்று ஸ்பெஷல் அப்டேட் வெளியாகி இருந்தது. இதனால் தளபதி 67 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

ட்ரெண்டாக்கும் ரசிகர்கள் :

மேலும் படத்தின் முதல் ப்ரோமோவானது நேற்று வெளியாகிய நிலையில் படத்திற்கான ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மேலும் அந்தப் விடியோவில் வரும் பல விவரங்களை டி-கோட் செய்வதில் ரசிகர்கள் மும்மரமாக இறங்கி உள்ளனர் அந்த வகையில் நேற்று #லியோ மற்றும் #ரோலக்ஸ் என இரண்டு ஹாஸ்டேக்குகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சன்சய்தத் சம்பளம் :

தளபதி 67 “லியோ” படத்தின் படப்பிடிப்பு சென்னனயில் முடிவடைந்ததை அடுத்து லியோ படக்குழு தற்போது காஷ்மீர் சென்றுள்ளது. அங்கே படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் வர வாய்ப்புள்ள சன்சய்தத் சம்பளம் ரூபாய் 10 கோடி என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் கெளதம் மேனன் மற்றும் மிஷ்கின் சம்பள விவரமும் தற்போது கிடைதுள்ளது.

மிஷ்கின், கெளதம் மேனன் சம்பளம் :

தகவலின் படி மிஷ்கின் மற்றும் கெளதம் மேனன் தளபதி 67 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றும், நடிகர் மிஷ்கின் அவர்களுக்கு மட்டுமே ஒரு நாளுக்கு 10 லட்சம் சம்பளம் என்றும், கெளதம் மேனனுக்கு சுமார் 5முதல் 6 லட்சம் வரை ஒரு நாள் சம்பளம் இருக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இனி வரும் காலங்களில் படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரமும் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement