தளபதி 67 கதை இதுவா? – வைரலாகும் புதிய கதை பற்றிய தகவல்.

0
486
- Advertisement -

விஜய் நடித்து பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கும் தளபதி 67 கதை பற்றிய தகவல் ஓன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

காஷ்மீரில் ஷட்டிங் :

இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், விடீயோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வந்தனர்.

முதல் ப்ரோமோ :

இப்படிப்பட்ட நிலையில் தான் படத்தில் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. அந்த ப்ரோமோவில் காலை காட்சியில் சாக்கலேட் தயாரிக்கும் விஜய் இரவு நேரத்தில் வாழ் ஒன்றை தயாரிக்கிறார். பின்னர் அங்கு பல கார்கள் வருகின்றனர். விஜய் வாழில் உள்ள சாக்கலேட்டை சாப்பிடும் படி, Bloody Sweet என சொன்னபடி அந்த ப்ரோமோ முடிந்தது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

அறியப்பட்ட கதை :

தளபதி 67 படத்தின் கதையில் விஜய் டி கடையில் வேலை செய்கிறார். ஆனால் இவரின் தம்பியை வில்லன்கள் கொலை செய்த்தால் கேங்ஸ்டராக விஜய் மாறுகிறார் என தளபதி 67 குறித்து முன்னர் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதினால் அவர் இயக்குய கைதி, விக்ரம் போன்ற படங்கள் போதை பொருளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதினால் இந்த படமும் கேங்ஸ்டர் கதை என்று கூறப்படுகிறது.

கதை இதுவாக இருக்கலாம் :

மேலும் சமீப காலமாக போதை சாக்கோலேட் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருவத்தினால் அந்த விஷயம் சம்மந்தப்பட்ட கதையாக தளபதி 67 இருக்க கூடும் என்று தகவல் ஓன்று வெளியாகி இருக்கிறது. சொல்லப்போனால் ப்ரோமோவில் வரும் அந்த கோகோ விதைகள் விக்ரம் படத்தில் கூறப்படும் அந்த போதை பொருளில் இன்னொரு வடிவமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது தளபதி 67 படம் “லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸினுள் வருவதற்க்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement