’ஒரு வேள அந்தக் கதையா இருக்குமோ?’ – அன்றே வெங்கட்பிரபு சொன்ன ஒன் லைன் – ’GOAT’ போஸ்டரும் அதுக்கேத்த மாதிரி தான இருக்கு.

0
676
- Advertisement -

விஜய் நடிக்கும் தளபதி 68 படத்திற்கான அப்டேட் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

தளபதி 68 படம்:

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. மேலும், விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். அதோடு இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி இருக்கிறது. இதை தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அதில் தளபதி 68 திரைப்படத்திற்கு கோட் G.O.A.T Greatest of all time என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தின் மேலே விமானமும் பறந்தபடி இருக்கிறது. பின் அந்த புகைப்படத்தில் வலது புறம் இருக்கும் விஜய் நீண்ட தாடியுடனும், இடது பக்கம் இருக்கும் விஜய் இளமையாகவும் இருப்பது போல் இருக்கிறது.

படத்தின் கதை:

மேலும், இடது பக்கம் இருக்கும் விஜய் விண்வெளிக்கு செல்லும் முன்பும், வல து புறம் இருக்கும் விஜய் விண்வெளியில் இருந்து வந்த பின்பும் என்பது போல கூறப்படுகிறது. அந்த போட்டோவில் பாராசூட்டும் இருக்கிறது. பின் அந்த புகைப்படத்தின் கீழ் light can devour darkness but darkness cannot consume the light அதாவது, இருளை ஒளியால் விழுங்க முடியும். ஆனால், இருளால் ஒளியை கிரகிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த படம் ஒரு விண்வெளி கதையாக இருக்கும் என்றும், விஜய் விஞ்ஞானியாக இருப்பார் என்றெல்லாம் ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கி விட்டார்கள்.

Advertisement