இப்படி எல்லாமா நடிப்பையா ? தங்கம் பாவக்கதையை பார்த்துவிட்டு விஜய் சொன்ன விஷயம் – வைரலாகும் வீடியோ.

0
112923
Vijay
- Advertisement -

சமீப காலமாகவே OTT தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். அதிலும் கொரனோ காலகட்டத்தில் பல உச்ச நட்சத்திரத்தின் படங்கள் கூட OTT தளத்தில் வெளியாகி வருகிறது. அதே போல பல்வேறு நடிகர் நடிகைகளும் வெப் சீரிஸ் தொடர்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. இந்த பாவக் கதையில், தங்கம், ஓர் இரவு, லவ் பண்ண விட்டுடணும், வான் மகள் என்று நான்கு கதை வெளியாகி இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் குறித்து கேள்வியெழுப்பக்கூடிய, விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இந்தப் படங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெருமையையும் கௌரவத்தையும் காப்பாற்றும் அமைப்பாக குடும்பம் இருக்கிறது என்பதுபோல முடிகின்றன இந்தப் படங்கள். 

- Advertisement -

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1986ஆம் ஆண்டு நடக்கும் ஒரு கதையாக இந்த பகுதி எடுக்கப்பட்டிருக்கும் இதில் மளிகை கடை வைத்திருக்கும் மகனான சாந்தனும் அவனது சிறுவயது நண்பனான முஸ்லிம் மதத்தை சேர்ந்த காளிதாஸ் சகோதரி பவானியை காதலிப்பார் காளிதாஸ் ஒரு திருநங்கை இதனால் அவரை பெற்றோரும் ஊர் மக்களும் இருக்கிறார்கள் மேலும் காசுக்கு தனது நண்பனான சாந்தனு மீது காதல் இருக்கும். ஆனால், சாந்தனு காளிதாஸின் தங்கையை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் வருத்தப்பட்டு பின்னர் அவர்களை ஊரைவிட்டு ஓட உதவி செய்வார் இதனால் அவருக்கு என்ன நேர்கிறது என்பது தான் தங்கம் கதை.

https://twitter.com/AVinthehousee/status/1340988029842821122

இதில் தங்கம் கதாபாத்திரத்தில் நடித்த சாந்தனு சத்தாரு கதாபாத்திரத்தில் நடித்த காளிதாஷும் ஒருவருக்கு ஒருவரை முந்திக்கொண்டு நடித்திருந்தார்கள். அதிலும் காளிதாசன் நடிப்பு பலரின் பாராட்டை பெற்று வருகிறது. மேலும், இத்தனை ஆண்டு காலமாக ஒரு நல்ல கதாபாத்திரத்திற்கு காத்திருந்த சாந்தனுவுக்கு இந்த தங்கம் கதாபாத்திரம் தீனி போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நிலையில் தங்களை பார்த்துவிட்டு இளையதளபதி விஜய் என்ன சொன்னார் என்பதை நடிகர் சாந்தனு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement