விஜய் தான் டாப்..! கேரளாவில் மீண்டும் நிரூபித்த தளபதி..! எட்ட முடியாத உச்சத்தில் விஜய்.!

0
1064
- Advertisement -

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

vijay actor

- Advertisement -

கேரளாவில் நடிகர் விஜக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதற்கு சான்றாக சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு பகுதிக்கு இளைய தளபதி நகர் என்று பெயர்வைத்துள்ளனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்நிலையில் மும்பையை தலைமையகமாக கொண்ட broadcast audience research council (BARC )என்று குழு, கேரள தொலைக்காட்சிகளில் அதிக TRP கொண்ட திரைப்படங்கள் எவை என்ற ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. அதில் விஜய்யின் “மெர்சல்” படம் 8.59 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், “தெறி ” படம் 7.64 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

-விளம்பரம்-

Mersal

இதில் “2countries” என்ற திரைப்படம் 3 வது இடத்திலும், பிரமாண்ட பொருட்செலவில் உருவான “பாகுபலி” திரைப்படம் 4வது இடத்திலும், “புதியமுகம் என்ற ” திரைப்படம் 5 வது இடத்தையும் பிடித்துள்ளது. இதன் மூலம் நடிகர் விஜய்யின் “மெர்சல்” மற்றும் “தெறி ” படம் தான் கேரளாவில் தொலைகாட்சியில் அதிக நபர்களால் பார்க்கபட்ட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Advertisement