விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம்.! விஜய்,அட்லீ -63, சர்கார் Update.!

0
232
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய்.

sarkar

விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார், அட்லி. ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது, இந்தக் கூட்டணி.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள், நடிகர் விஜய் – இயக்குனர் அட்லி.

- Advertisement -

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்ற சில தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கவுள்ள “விஜய் 63” படத்தின் அதிகாரபூர்வ தகவல் வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

vijay and atlee

மேலும், தற்போது விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று வெளியிட போவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கு முன்பாக செப்டம்பர் 19 ஆம் தேதி “சர்கார்” சிங்கள் ட்ராக் ஒன்றை வெளியிடலாம் என்று படகுழு திட்டமிட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, வரும் செப்டம்பர் மாதம் விஜய் ரசிகர்களுக்கு இரண்டு சர்ப்ரைஸ் காத்துக்கொண்டிருக்கிறது.

Advertisement