தளபதி 64 பட நாயகி மாளவிகா மோகனை அசிங்கபடுத்தி அனுப்பிய மணிரத்னம்.

0
130447
malavika-mohanan
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் மிகப் பிரபலமான இயக்குனர் என்று சொன்னால் இயக்குனர் மணிரத்தினம் அவர்களைச் சொல்லலாம். ஏன்னா அவர் அந்த அளவிற்கு சூப்பர் டூப்பர் படங்களை தமிழில் இயக்கி உள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தன்னுடைய கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் என்ற தகவல் சில நாட்களாகவே இணையங்களில் பரவி வந்தது. பின் இந்த படத்தில் நடிப்பதற்காக பல நடிகர்களுக்கு டெஸ்ட் ஷூட் வைத்தார்.மேலும்,அதற்கு பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையர் ஆக பார்த்திபன், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத் தேவனாக கார்த்திக், ராஜா ராஜனாக அதர்வா என பல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for malavika mohanan vijay 64"

- Advertisement -

இதனைத்தொடர்ந்து அதர்வா, குந்தவையாக அனுஷ்கா, வானதியாக ராஷி கன்னா, பூங்குழலியாக ரகுல் ப்ரீத் சிங், மற்றும் மிக முக்கியமாக நந்தினியாக ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். மேலும், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் தெரியவந்து உள்ளது. மேலும்,இந்த படத்தில் அதிகமான நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் மிகப் பிரம்மாண்டமான படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக படத்தின் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : பார்ட்டி, பீச்,மாடர்ன் உடை. 50 வதிலும் அலம்பல் செய்யும் மதுபாலா. புகைப்படத்தை பாருங்க.

மேலும், இயக்குனர் மணிரத்னம் அவர்கள் குறித்தோ, தயாரிப்பு நிறுவனம் குறித்தோ இதுவரை அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் வெளியிடவில்லை. ஆனால், சமீப காலமாக செய்திகளில் அதிகமாகவே அடிபடுவது பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றி தான். மேலும், இந்த படத்திற்காக பல நடிகர்களை தேர்வு செய்து வருகின்றனர். அதில் புதுப்புது நடிகைகள் பெயர் அடிபடுவதும், சில பிரபலமான நடிகைகள் வெளியேறுவதும் என பல சர்சைகள் இணையங்களில் எழுந்து வருகின்றன. இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் படத்திற்காக நடிகைகளை தேர்வு செய்வதில் பல நடிகைகளை ரிஜெக்ட் செய்து உள்ளார். மேலும்,அதில் ரிஜெக்ட் செய்த நடிகைகளில் ஒருவர் தற்போது விஜய்யின் தளபதி 63 படமான பிகில் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for manirathnam ponniyin selvan"

அதுமட்டும் இல்லாமல் பட நடிகையின் பெயர் அடிபடுகிறது. மேலும்,அந்த பட்டியலில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அது வேற யாரும் இல்லை நம்ம ஆடை அழகி நடிகை அமலாபால் தான். மேலும்,நடிகை அமலாபால் இந்த படத்தில் நடிக்க ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவரை திடீரென்று படத்தில் இருந்து விலகி விட்டார்கள். அதோடு இயக்குநர் பிரியதர்ஷன் லிசி தம்பதியினரின் மகள் கல்யாணியை அழைத்து லுக் டெஸ்ட் எடுத்துப் பார்த்தார்கள். அதன் பின் திருப்தி இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். தற்போது அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் ரஜினியின் பேட்ட படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தேர்வு செய்யப் பட்டு நிராகரிக்கப்பட்டார் என்ற எந்த தகவலும் பரவி வருகிறது. அதோடு இவர் உலகப் புகழ்பெற்ற இயக்குனரின் படத்தில் நடித்து அவருடைய பாராட்டுகளை பெற்றவர் மாளவிகா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருந்தும் இவரை பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நிராகரித்து விட்டார்கள். இப்படி பல நடிகர்களை தேர்வு செய்து ரிஜெக்ட் செய்து வருகிறார்கள். பின் இந்த படம் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

Advertisement