விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க வந்த தாமரை – அப்போ இந்த சீரியல் முடியலையா ?

0
889
- Advertisement -

விஜய் டிவி சீரியலில் பிக் பாஸ் தாமரை நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தாமரை செல்வி. இவர் மேடை நாடக கலைஞர்.

-விளம்பரம்-

மேடை நாடகங்களில் நடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தை பார்த்து வந்தவர் தாமரை. பின் இவர் முகம் தெரியாத நபராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். நிகழ்ச்சி ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து புயலாக மாறி டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. தாமரை இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாமரை:

இதற்கு பின் தாமரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதில் தாமரை நான்காம் இடத்தை பிடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் முடிவடைந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் தாமரை தன்னுடைய கணவருடன் சேர்ந்து பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் தாமரை தன்னுடைய கணவருடன் சேர்ந்து பல கெட்டப்புகளில் நடனமாடி கலக்கியிருந்தார். பிக் பாஸை விட இந்த நடன நிகழ்ச்சியின் மூலம் தான் தாமரைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்று சொல்லலாம்.

தாமரை நடிக்கும் படம்:

அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் தாமரை கலக்கி இருந்தார். தற்போது இவர் படத்தில் நடித்து வருகிறார். அதற்கான புகைப்படத்தை சமீபத்தில் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அந்த படத்தில் ரோபோ சங்கரும் நடிக்கிறார். படத்தில் தாமரை உடைய கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் தாமரை விஜய் டிவி சீரியலில் நடிக்க இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பாரதி கண்ணம்மா சீரியல்:

அதாவது, தாமரை செல்வி புதியதாக சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கதாநாயகனாக நடிக்கும் பாரதி மற்றும் கதாநாயகியாக நடிக்கும் கண்ணம்மாவுடன் சேர்ந்து தாமரை எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

தாமரை செல்வி நடிக்கும் சீரியல்:

அதோடு பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது புதிய சீரியலா? இல்லை பாரதி கண்ணம்மா தொடரிலேயே இவர் நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை. தற்போது இவர் பாரதி கண்ணம்மா மற்றும் பிற நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே தாமரைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement