முதலிரவில் Boomer ஆண்டி சொல்லும் அட்வைஸ். விஜய் டிவி சீரியலை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள். ஏன் பாருங்க.

0
1130
Thamizhum Saraswathiyum
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் இல்லத்தரசிகளின் பேவரைட்டாக விஜய் டிவி சீரியல்கள் திகழ்ந்து வருகிறது. அதிலும் கொரோனா தொற்று காலம் தொடங்கியதிலிருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்றதால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பிக்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை களமிறக்கி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் பல தொடர்கள் புதிதாக ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில் ஒன்று தான் தமிழும் சரஸ்வதியும் தொடர். இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

-விளம்பரம்-

தமிழும் சரஸ்வதியும் சீரியல்:

இந்த தொடரை குமரன் இயக்குகிறார். இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் தீபக் தினகரனும், சரஸ்வதி கதாபாத்திரத்தில் நச்சத்திரா நடிக்கிறார்கள். இவர்களுடன் ரேகா கிரிஷ்ணப்பா, தர்ஷனா, மீரா கிருஷ்ணன், ரமணிசந்திரன் நவீன் வெற்றி, பிரபாகரன் சந்திரன், அனிதா வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடர் பணக்கார குடும்பத்தை சேர்ந்த தமிழ் என்பவன் தனது குடும்ப சூழ்நிலைக்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தொழிலை கவனித்து வெற்றி அடைகிறார். ஆனால், சமூகம் அவனை படிக்காதவன் என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறது.

- Advertisement -

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதை:

பின் அவருக்கு பெண் பார்க்கும் இடத்திலும் படிக்காதவன் என்பதால் பெண்ணையும் யாரும் கொடுப்பதில்லை. அந்த சமயத்தில்தான் அழகான வெகுளித்தனமான சரஸ்வதி வருகிறார். ஆனால், அவள் பனிரெண்டாம் வகுப்பு கூட தேர்ச்சி அடையாமல் இருக்கிறார். பின் தமிழின் குடும்பத்திற்கு சரஸ்வதி பிடித்து போகி சரஸ்வதி எம்பிஏ படித்தவர் என்று பொய் சொல்லி திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. தமிழுக்கும்-சரஸ்வதிக்கும் திருமணம் நடக்குமா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்றுகொண்டிருக்கின்றது.

பிஜேபி உறுப்பினர் போட்ட வீடியோ:

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலின் ஒரு காட்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை பிஜேபி உறுப்பினர் கிஷோர் கே ஸ்வாமி என்பவர் ட்வீட்டரில் பதிவிட்டு, இதுதான் நாள் முழுக்க எல்லோர் வீடுகளிலும் ஓடிட்டு இருக்கு. அப்புறம் எங்கிருந்து சமுதாயம் உருப்படும் என்று பதிவிட்டிருக்கிறார். அப்படி என்னதான் அந்த வீடியோவில் இருக்கிறது என்றால், திருமணமான பெண் ஒருவர் அறையில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அந்த அறைக்குள் வயதான பெண்ணொருவர் வந்து டென்சனா இருக்கிறாயா? என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் காட்சி வீடியோ:

இன்னைக்கு உனக்கு சாந்தி முகூர்த்தம் அதனால் தான் என்று கேட்டேன் என்று சொல்கிறார். உடனே அந்த பெண் அதனால் என்ன எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நான் தைரியமாக தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே அந்த வயதான பெண் எங்க காலத்திலெல்லாம் பாட்டில்களை வைத்து எங்களை பயமுறுத்தி விடுவார்கள். தப்பு தப்பா எங்களிடம் சொல்லி கொடுப்பார்கள். நான் உன்னை பயமுறுத்த வரவில்லை, நீ தைரியமாக இருக்கிறாய். ஆனால், விவரமாய் இருக்கிறாயா? விவரம் தெரியாத குழந்தை பாம்பை கையில் பிடித்த மாதிரி அது தைரியமாக இருக்க அர்த்தமாய் என்று அவர் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்.

சீரியலை வறுத்து எடுத்த நெட்டிசன்கள்:

அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் பல விதமாக விமர்சித்து வருகிறார்கள் அதில் அந்த பெண் விண்வெளி வீரர் விண்வெளிப்பயணம் மேற்கொள்ள போகிறார் என்றும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது இதெல்லாம் தேவையா? சீரியல்கள் எல்லாம் கலாச்சாரத்திற்கு கேடு விளைவிக்கிற மாறி வருகிறது என்றும் தாறுமாறாக தமிழும் சரஸ்வதியும் சீரியலை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள். இதற்கு சீரியல் குழு என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement