நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் ஏற்கனவே வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் பயங்கர ஹிட் ஆனா நிலையில் தற்போது மீண்டும் இந்த ஜோடி நடிப்பில் ‘தண்டேல்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் சந்தூ மொண்டேடி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஸ்ரீகாக்குளம் மீனவரின் உண்மை வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்:
படத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில் நாக சைதன்யா தண்டேல் (தலைவன்) ஆகப் பொறுப்பேற்று ஒன்பது மாதம் குஜராத் தாண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்கப் போக, மீதம் 3 மாதம் ஊருக்கு வருகிறார். அப்போது ஒரு முறை சாய் பல்லவி எவ்வளவு சொல்லியும் கேட்காமல், நாக சைதன்யா கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்.
அந்த சமயத்தில் பெரும் புயல் உண்டாகிறது. அந்த சமயம் ஒருவர் புயலில் மாட்டிக்கொள்ள நாக சைதன்யா அவரைக் காப்பாற்ற முயலும்போது படகு தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விடுகிறது. அதனால் படகில் இருந்த அனைவரையும் பாகிஸ்தான் அரசாங்கம் கைது செய்கிறது. பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நாக சைதன்யா தப்பித்தாரா, இல்லையா. மீண்டும் இந்தியா வந்து சாய் பல்லவியை திருமணம் செய்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை கதை.
ஒரு சில தோல்வி படங்களுக்குப் பிறகு நாக சைதன்யாவுக்கு இந்த படம் ஒரு நல்ல கம்மேக் ஆக அமைந்துள்ளது என்று சொல்லலாம். மீனவ தலைவனாக நாக சைதன்யா வாழ்ந்துள்ளார். சாய் பல்லவியுடன் காதல், தன் நண்பனுக்காக சண்டை போடுவது, பாகிஸ்தான் சிறைச்சாலையில் காவலாளிகளிடம் போராடுவது என முழுவதுமாக ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோவாக நாக சைதன்யா கலக்கியிருக்கிறார். சாய் பல்லவி வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
குறிப்பாக தனது காதலனுக்காக ஏங்கும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக நடத்து இருக்கிறார். அதேபோல் தன் பேச்சைக் கேட்காத காதலன் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் போது கூட கோபத்தில் பேசாமல் இருப்பது போன்ற காட்சிகளில் சாய் பல்லவி ஸ்கோர் செய்திருக்கிறார். மேலும், தனது டான்ஸ் மூலம் பாடல்களுக்கு வலு சேர்த்து இருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் நாக சைதன்யா- சாய் பல்லவி ஆகியோரின் கெமிஸ்ட்ரி ரசிக்கும்படி உள்ளது. இயக்குனர் படத்தின் முதல் பாதியை காதல், ஆட்டம், பாட்டம் என கொண்டு சென்றாலும், இரண்டாம் பாதியை வேறு ஒரு பாணியில் காட்டியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான அமரன் உண்மை கதை என்றாலும் சினிமாவிற்கான மாற்றம் பெரிதும் படத்தை தொந்தரவு செய்யவில்லை. ஆனால், இது உண்மை கதை என்றாலும், சினிமாவுக்கு தேவையான சில மசாலாக்களை படத்தில் சேர்த்து இருக்கிறார்கள். குறிப்பாக பாகிஸ்தான் கலவரத்தில்யே தப்பித்து மீண்டும் சிறைச்சாலைக்கு நாக சைதன்யா வருவது எல்லாம் கொஞ்சம் கூட லாஜிகே இல்லை. மேலும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரும்பலம். அதேபோல் ஒளிப்பதிவாளர், எடிட்டர் படத்தை அழகாய் காட்டியிருக்கிறார்கள்.
நிறை:
சாய்பல்லவி – நாக
சைதன்யா கெமிஸ்ட்ரி
பாடல்கள் மற்றும் பின்னணி பாடல்கள்.
கதாபாத்திரங்களின் தேர்வு
இரண்டாம் பாதி
குறை:
முதல் 30 நிமிடங்கள் சுவாரசியமாக இல்லை.
ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் ‘தண்டேல்’ , நாக சைதன்யாவின் கம்பேக்