தங்க மீன்கள் படமா ..? அது மோசமான படம் ! ராம்மிடம் வெளிப்படையாக கூறிய பிரபல இயக்குனர்

0
1112
Thanga-Meengal movie

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற தரமான படங்களை இயகியவர் இயக்குநர் ராம். தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதை களங்களை கொண்டு பல படங்களை படைத்த ராம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை வித்யாசமான கோணத்தில் மாட்றியவர்.

ram

மேலும் இயக்குனர் ராமிற் க்கு சினிமாவை தாண்டி அவரின் தெளிவான பேச்சிற்கும் பல ரசிகர்கலும் உள்ளனர். பொதுவாக ராம் படத்தில் நடிக்கும் கதா பாத்திரமும் சரி அதில் நடிக்கும் நடிகர்களும் சரி மற்ற இயக்குனர்களை விட சற்று வித்யாசமாக தான் இருக்கும்.மேலும் ராம் திரை படத்திற்கு பல்வேறு ரசிகர்கள் இருந்தாலும் அதையும் மீறி சினிமாவை சார்ந்த பிரபலங்களும் ராமின் படத்தை உற்று நோக்கித்தான் வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் ராம் பிரபல இயக்குனர் பாலு மஹிந்திராவின் நூலகத் திறப்பு விழாவில் பங்குபெற்ற ராம் தான் ஒரு மிகப்பெரிய பாலு மஹிந்தராவின் ரசிகர் என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் இயக்கிய கற்றது தமிழ் என்ற படத்தை இயக்குனர் பாலு மஹிந்திராவிடம் காட்டிய போது அவர் தான் பார்த்த ஆசியாவின் சிறந்த 5 படங்களில் இந்த படமும் ஒன்று தெரிவித்திருந்தா ராம்.

Balu Mahendra

ஆனால் சமீபத்தில் ராம் இயக்கிய தங்க மீன்கள் என்ற படத்தை பாலு மஹிந்திரா விடம் காட்டிய போது அது மிகவும் மோசமான படம் என்று கூறிவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.மேலும் தான் கடைசியாக இயக்கிய தரமணி படத்தை அவரிடம் காட்ட முடியவில்லை என்று மிகவும் வருத்தமாக தெரிவித்திருக்கிறார் இயக்குனர் ராம்.