தனி ஒருவன்-2 படத்தில் இந்த பிரபல முன்னணி மாஸ் நடிகர் வில்லனா..? யார் தெரியுமா..?

0
530
Thani-Oruvan

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ”தனி ஒருவன் ” படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உளது. ஜெயம் ரவி , நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தின் முதல் பாகம் மாபெரும் ஹிட் அடைந்தது.

mohan-raja

இயக்குனர் மோகன் ராஜா, ஜெயம் ரவி, அரவிந்த் சாமி உள்ளிட்டோருக்கு இந்த படம் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். இரண்டாம் பாகத்தில் நடிகர் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாகவும், நடிகை நயன்தாரா தடையவியல் நிபுணராகவும் நடிக்கிண்டனர்.

இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும், முதல் பக்கத்தில் வில்லனாக இருந்த சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரம் இறந்துவிடுவதால். இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவியே வில்லனாக நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மம்மூட்டியுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

mammooty

மலையாள நடிகரான மம்மூட்டி மலையாளத்தில் பல படங்களிலும் நடித்துவிட்டார். அதே போல பல நேரடி தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், இதுவரை மம்மூட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை. ஒருவேளை இந்த படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்படையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.