மீராவை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன தர்ஷன்.! அதிர்ச்சியடைந்த மீரா மிதுன்.!

0
17606
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக தர்ஷன் தான் ஹைலைட்டாக தெரிந்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவது வனிதா மட்டும் தான். அவரை யாரும் எதிர்த்து பேச பயந்த போது தர்ஷன் மட்டும் தான் வனிதாவை எதிர்த்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் மத்தியில் தர்ஷன் மேலும் நல்ல அபிப்ராயத்தை பெற்றுள்ளார். இன்றைய நிகழ்ச்சியில் கூட வணிதாவிற்கும், தர்ஷனுக்கும் மிகப்பெரிய வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆனால், தர்ஷன், வனிதா கத்தி பேசினால் எல்லாம் சரியாகிவிடாது என்று மிகவும் போல்டாகவே கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : இணையத்தில் வைரலாகும் லாஸ்லியாவின் புகைப்படம்.! உண்மையில் அவர் யார் தெரியுமா.! 

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் மீராவையும் தர்ஷன் விட்டு வைக்கவில்லை. இன்றைய நிகழ்ச்சியில் சாண்டி, மீராக்கு எதாவது பெயர் வையுங்கள் என்று கேட்டதற்கு தர்ஷன் ‘அழகான பச்சோந்தி’ என்று கூறி நோஸ் கட்கொடுத்தார்.

இதனால் கடுப்பான மீரா, தர்ஷனிடம் தனியாக பேசும் போது, என்னை ஏன் பச்சோந்தி என்று சொன்னாய் என்று கேட்டதற்கு, ஆம், நீ நேரத்திற்கு ஏற்றவாறு உன்னை மாற்றிக்கொள்கிறாய் முதலில் மதுவிடம் பேசினாய் அப்புறம் முகனிடம் பேசினாய், அப்புறம் அவனிடமும் சண்டை போட்டு விட்டாய் தற்போது வணிதாவிடம் பேசி வருகிறாய் என்றார்.

-விளம்பரம்-

மேலும், நீ வெளியே உனக்கு 10 வருடம் உதவி செய்த்தவரை ஒரு தவறு செய்தாய் என்று அவரை கழட்டி விட்டு விட்டாய், உனக்கு எங்கே நட்பின் மதிப்பு தெரிய போகிறது என்றார் தர்ஷன். இதற்கு மீரா, எனக்கு நண்பராக இருப்பவர்கள் ஒரு தவறு கூட செய்ய கூடாது என்றார்.

அதற்கு தர்ஷனோ நட்பு பத்தியெல்லாம் நீ பேசுனா செருப்பால அடிப்பேன் என்றதும் ஷாக்கடைந்த மீரா, வார்த்தையை அளந்து பேசு தர்ஷன் என்றார் பின்னர் சரி, தெரியாமல் பேசி விட்டேன் இருப்பினும் உனக்கு நட்பு என்றால் என்னவென்று தெரியவில்லை என்று கூறினார் தர்ஷன்.

Advertisement