‘வித்யாசமான கதைக்களம், சஸ்பென்ஸ் திரில்லர் – எப்படி இருக்கிறது ‘தி அக்காலி’ – முழு விமர்சனம்

0
445
- Advertisement -

இயக்குனர் முகமத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தி அக்காலி. இந்த படத்தை P. யூகேஸ்வரன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய்குமார், நாசர், விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கிரி முர்பி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வித்தியாசமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

அக்காலி என்பது பஞ்சாபில் சில பகுதிகளில் பேசப்படும் வழக்கு மொழி. இறப்பில்லாத மனிதன் என்று பெயர். படத்தில் ஜெயக்குமார் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். இவருடைய கதைக்களம்: போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும்போது மயானத்தில் புதைக்கப்படும் பிணங்களை எடுத்து அந்த குழிகளில் போதைப் பொருட்களை பதிக்கி வைக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்கிறது.

- Advertisement -

இதனால் ஜெயக்குமார் தலைமையிலான குழு ரகசியமாக அதை கவனிக்கிறது. அப்போது பல அதிர்ச்சியான தகவல்கள் எல்லாம் வெளிவருகிறது. சாத்தானை வழிபடும் கும்பல் அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்கள் நரபலி கொடுப்பதையும் ஜெயக்குமார் கண்டுபிடிக்கிறார்கள். இது தொடர்பாக அவர் விசாரணையும் நடத்துகிறார். ஆனால், இதை உயரதிகாரி தடுக்கிறார். இருந்தும் ஜெயக்குமார் இதை தீவிரமாக விசாரிக்கிறார்.

இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அப்போது அவரை சுற்றி பல மர்மமான விஷயங்கள் நடைபெறுகிறது. இறுதியில் ஜெயக்குமார் அந்த நபரை கண்டுபிடித்தாரா? அவரை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்ன? இதனால் ஜெயக்குமாருக்கு என்ன ஆனது? இந்த பிரச்சனைகள் எல்லாம் ஜெயக்குமார் சமாளித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. சாத்தான்களை வழிபடுபவர்கள், நரபலி கொடுக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் க்ரைம் திரில்லர் பாணியில் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

கொஞ்சம் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், பெரிதாக சுவாரசியம் இல்லை. படத்தில் காவல்துறை அதிகாரியாக வரும் ஜெயக்குமார், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி ஆகியோரின் நடிப்பு நன்றாக இருக்கிறது. இந்தப்படத்தில் பயன்பட்டிருக்கும் லொகேஷன்கள் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. வழக்கம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் செய்திருக்கிறார்கள்.

தோட்டா தரணியின் பணி படம் முழுவதுமே தெரிகிறது. படத்தில் பாதி காட்சிகள் கிராபிக்ஸ் என்றாலும் தோட்டத்தின் கலை இயக்கமும் சிறப்பாக இருக்கிறது. விஎப்எக்ஸ் காட்சிகள் படத்திற்கு முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. வித்தியாசமான கதைக்களமாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் விறுவிறுப்பை காண்பித்திருக்கலாம். ஒரு சில காட்சிகள் ஓவராக காண்பித்து கடுப்பை ஏற்றி இருக்கிறது.

படத்தின் ஆரம்பம் எதிர்பார்ப்போடு இருந்தாலும் நீளம் அதிகமாக இருக்கிறது. அதோடு இறுதி கிளைமாக்ஸ் காட்சிகளும் சரியில்லை. நிறைய தேவையில்லாத காட்சிகளை காண்பித்திருக்கிறார். சில காட்சிகள் படம் எங்கே செல்கிறது என்று புரியாத அளவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தத்தில் வித்தியாசமான கதைக்களமாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் கோட்டை விட்டுவிட்டார். ரொம்ப சுமாரான படமாகத்தான் இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கதைக்களம் ஓகே

பின்னணி இசை ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது

குறை:

இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற இடத்தில் இன்னும் கவனம் செலுத்த இருக்க வேண்டும்

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

தேவையில்லாத சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம்

கிளைமேக்ஸ் காட்சி விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் தி அக்காலி-தோல்வி

Advertisement