பெத்த புள்ள இறந்தப்ப கூட நான் யான குட்டிய விட்டு போகல – ஆஸ்கர் வென்ற தமிழ் ஆவணப் படத்தில் நடித்த பெள்ளி பேட்டி.

0
407
- Advertisement -

முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவித்திருப்பதை அடுத்து படத்தில் நடித்த பெல்லி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானை குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்த ஒரு சில மாதமே ஆன நிலையில் இந்த யானை குட்டிகள் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது.

-விளம்பரம்-

மேலும், இந்த யானை குட்டிகளை வளர்த்து வருபவர்கள் தான் பொம்மண் மற்றும் அவருடைய மனைவி பெள்ளி. இவர்கள் இந்த யானை குட்டிகளை எப்படி எல்லாம் பராமரிக்கிறார்கள்? அதன் மீது எப்படி அன்பு செலுத்துகிறார்கள்? என்பது குறித்த ஆவண படமாக தான் இந்த The Elephant Whisperers உருவாகியிருந்தது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்சில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை கார்திகி கோன்சால்வ்ஸ் என்பவர் இயக்கி இருந்தார்.

- Advertisement -

தி படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படம் குறித்து பல பிரபலங்கள் பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் இந்த The Elephant Whisperers படம் இந்தியாவின் முதல் ஆஸ்கர் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த ஆஸ்கர் விழாவில் இந்த படத்துடன் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கும் விருது கிடைத்திருக்கிறது. மேலும், The Elephant Whisperers படத்திற்காக ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆஸ்கர் விருது கிடைத்த படம்:

இந்நிலையில் The Elephant Whisperers படத்தில் நடித்த பெள்ளி அவர்கள் பேட்டி ஒன்று அளித்து அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஆஸ்கர் விருது கிடைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. யானை குட்டியை மட்டும் என்னுடைய கையில் கொடுக்காமல் இருந்தால் எனக்கு இந்த விருது கிடைத்திருக்காது. யானை குட்டி எங்களிடம் ஒரு குழந்தை போன்று பழகி இருக்கிறது. அதை அப்படியே ஆவணப்படமாகவே எடுத்து விட்டார்கள். இன்று ஆஸ்கர் விருது கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.

-விளம்பரம்-

நடிகை பெள்ளி அளித்த பேட்டி:

மேலும், எங்களுடைய முதுமலை முகாமிற்கே சந்தோஷம். யானை குட்டிகளை வளர்ப்பதில் அதிக கஷ்டங்களை சந்தித்தோம். வீட்டில் ஒரு கஷ்டம் என்றால் அதை பார்க்க முடியாது. இறப்புக்கு கூட போக முடியாது. எங்களுடைய பிள்ளை நெருப்பில் எறிந்தபோது கூட போக முடியாமல் யானை குட்டியை பிடித்துக்கொண்டு காட்டுக்குள் நின்று அழுந்திருந்தோம். காரணம், அந்த குட்டியும் ஒரு குழந்தை தானே. அதை விட்டுவிட்டு போக முடியாது. அதனை கூட்டி வந்து அதனுடைய இடத்தில் கட்டி வைத்துவிட்டு அதனை பார்த்துக்கொள்ள வேறு ஒரு ஆள் வைத்துவிட்டு அதற்கு பிறகு தான் என்னுடைய பிள்ளையை சென்று பார்த்தேன்.

யானை வளர்ப்பு குறித்து சொன்னது:

நான் பெற்ற பிள்ளை இறந்தபோது கூட மற்றவர்கள் தான் எடுத்துக் கொண்டு போனார்கள். எனது கை உடைந்த போது கூட குட்டியை விட்டுவிட்டு நான் போகவில்லை. இதுபோல நான் நிறைய கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். கஷ்டப்பட்டு தான் நான் ரகுவை வளர்த்தேன். ரகு வளர்ந்து வரும் போது தான் பொம்மி வந்தாள். அதன் பிறகு ஆறு மாதங்கள் வேலை செய்யாமல் இருந்தேன். பிறகு மீண்டும் என்னை வேலைக்கு வந்து சேர சொன்னார்கள். யானை குட்டிகளும் என்னுடைய பேத்தி, பேரனை போல தான். இதுவரை நான் அவர்களை அடித்ததே இல்லை. குழந்தைகளிடம் எப்படி பேசி பழகுவமோ அப்படித்தான் பழகி வைத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.

Advertisement