சாலையில் சென்ற யானை செய்த குறும்புதனத்தை பார்த்து உருவான The Elephant Whisperers – யார் இந்த பெண் இயக்குனர் கார்த்திகி.

0
618
- Advertisement -

ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற ஆவணக் குறும்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை காட்டில் இருக்கும் யானைகளை வைத்து தான் The Elephant Whisperers என்ற குறும்படம் எடுக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானை குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

பிறந்த ஒரு சில மாதமே ஆன நிலையில் இந்த யானை குட்டிகள் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், இந்த யானை குட்டிகளை வளர்த்து வருபவர்கள் தான் பொம்மண் மற்றும் அவருடைய மனைவி பெள்ளி. இவர்கள் இந்த யானை குட்டிகளை எப்படி எல்லாம் பராமரிக்கிறார்கள்? அதன் மீது எப்படி அன்பு செலுத்துகிறார்கள்? என்பது குறித்த ஆவண படமாக தான் இந்த The Elephant Whisperers உருவாகியிருந்தது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்சில் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

The Elephant Whisperers படம்:

இந்த படத்தை கார்திகி கோன்சால்வ்ஸ் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் குறித்து பல பிரபலங்கள் பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் இந்த The Elephant Whisperers படத்திற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் எடுத்த இந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இது இந்தியாவிற்கு மட்டும் இல்லாமல் தமிழகத்திற்கும் பெருமையை சேர்த்திருக்கிறது. இந்நிலையில் இந்த குறும்படத்தை இயக்கிய இயக்குனர் குறித்து பலரும் அறிந்திடாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் குறித்த தகவல்:

கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஊட்டியில் தான். இவர் ஊட்டியில் உள்ள செயின் ஹில்டாஸ் பள்ளியில் படித்தார். அதற்கு பின்னர் இவர் கோவையில் உள்ள ஜி ஆர் டி எனும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி விஸ்காம் படித்திருக்கிறார். பின்னர் போட்டோகிராபி பற்றிய படிப்பும் படித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் புகைப்பட கலைஞராக சில காலம் பணியாற்றி வந்தார். அதற்கு பின் தான் இவர் குறும்படங்களை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

யானை படம் எடுக்க காரணம்:

ஊட்டியில் ஒரு நாள் பொம்மன், ரகு யானையுடன் சாலையில் நடந்து சென்ற போது இயக்குனர் பார்த்திருக்கிறார். அந்த யானைகள் செய்யும் துறுதுறு அட்டகாசங்களை எல்லாம் பார்த்து கார்த்திகிக்கு மிகவும் பிடித்து போனது. உடனே அவர் அந்த யானையை பின்தொடர்ந்து இருக்கிறார். அப்போது அந்த ரகு யானை தண்ணீரில் பொம்மனுடன் விளையாடி இருந்தது. இரு யானைகளுக்கும் இடையே இருக்கும் பாசத்தை பார்த்து கார்த்திகி குறும்படமாக இயக்க நினைத்தார். அதன்பின் தான் இவர் The Elephant Whisperers என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு குறும்படத்தை இயக்கத் தொடங்கினார்.

குறும்படம் குறித்த தகவல்:

இந்த குறும்படத்தை எடுத்து முடிக்க கிட்டதட்ட ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. மொத்தம் 450 மணி நேரம் இந்த படத்தை படமாக்கி இருந்தார். மேலும், இந்த படம் வெற்றி பெற்றதற்கு காரணம் இவருக்கு இயற்கையின் மீது இருந்த காதலே என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் கார்த்திகி தாய்க்கு விலங்குகள் என்றாலே ரொம்ப பிடிக்குமாம். அதேபோல கார்த்திகி தந்தை ஒரு போட்டோகிராபர். இவர்களிடம் இருந்து தான் இவருக்கு இயற்கையின் மீது காதல், பாசம் வந்தது. இவருடைய பாட்டிக்கும் இயற்கை மீது அதிக ஆர்வம். இவரை 18 மாத குழந்தையாக இருக்கும்போதே வனப்பகுதிகளுக்கு அழைத்து சென்று விடுவார்களாம். அதனால் தான் இவருக்கு இயற்கை, சுற்றுச்சூழல் மீது அதிக அதிக ஈடுபாடு.

Advertisement