95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகில் வெளியான பல்வேறு மொழி படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதுமலையில் எடுக்கப்பட்ட “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்திற்க்கு விருதை வென்று இருக்கிறது. இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தன்னுடைய ஐந்து வருடங்களை செலவிட்டு இந்த “The Elephant Whisperers” ஆவணப்படத்தை எடுத்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதையுடன் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ்ல் வெளியாகியது.

இப்படம் தற்போது ஆஸ்கர் விருதை வென்று இருக்கிறது இப்படி ஆஸ்கர் விருதை வென்ற இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது ? என்பதை பார்பபோம்.தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் கர்நாடக மற்றும் கேரளா எல்லையில் அமைத்துள்ள முதுமலை தெப்படிக்காடு யானைகள் முகாமிற்கு தாயை இழந்த யானைகள் இரண்டு குட்டி யானைகள் கொண்டுவரப்படுகிறது. இந்த இரண்டு யானைகளுக்கு ரகு, அம்மு என்று பெயர். இவற்றை பேரன்பை ஊட்டி வளர்க்கின்றனர் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதி.

Advertisement

கதைக்களம் :

இந்த யானைகளை வளர்க்கும் பொம்மனுக்கும் பெல்லிக்கும் இடையிலான நட்பு எப்படி காதலாக மலர்ந்தது?, இருவரும் சேர்ந்து எப்ப யானைகளை பாசத்தோடு வளர்த்தனர்?, கடைசி வரையில் யானைகள் அவர்களோடு இருந்தனவா? என பல இந்த இரண்டு குட்டி யானைகளை வைத்து இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் படமாக எடுத்துள்ளார். “நான் காட்டு நாயகன் என்ற குரலுடன் அறிமுகமாகிறார் பொம்மன், தெப்பக்காட்டில் யானைகளை பராமரிக்கும் பணியில் இருந்து வருகிறார் பொம்மன். இந்த குட்டி யானைகளுடைய தாய் யானை மிசாரம் தாக்கி இறந்து விடுகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த இரண்டு யானைகளை வளர்க்கும் பொறுப்பு பொம்மனுக்கும் அவருடைய உதவியாளர் பெல்லிக்கும் வழங்கப்படுகிறது. இவர்களிடம் பாசமாக வளர்கிறது ரகு மற்றும் அம்மு யானைகள். ரகு வளர்ந்த பிறகு அதனை காட்டிற்குள் விட முடிவு செய்ய்ன்றனர் ஆனால் அது மற்ற யானைகளுடன் செல்ல மாறுகிறது. பின்னர் அம்முக்குட்டி என்ற யானையும் வருகிறது இந்த இரண்டு யானைகளுக்கும் பொம்மன் மற்றும் பெலிலியின் வாழ்ககையை மாற்றுகிறது. சில நாட்கள் கடக்கிறது பொம்மன் மற்றும் பெல்லி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

Advertisement

உணர்ச்சிகரமான யானைகளின் கதை :

இந்நிலையில் வனத்துறையால் அழைத்து செல்லப்படுகிறது ரகு யானை. இந்த யானை கொண்டு செல்லப்பட்டதை கன்னட இருவரும் தங்களுடைய குழந்தைகளே சென்றது போல உணர்ந்து வருந்துகின்றனர். ஆனால் இவர்களது வருத்தத்தை அம்மிகுட்டி யானை இருப்பு ஆசுவாசப்படுத்துகிறது. ரகு மற்றும் அம்முக்குட்டி என்ற இரண்டு கைவிடப்பட்ட யானைகளை பார்த்துக்கொண்ட தம்பதி என பொம்மனையும் பெல்லியும் காட்டப்படுகின்றன.

Advertisement

ஆஸ்கர் வெல்லுமா :

யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையேயான நட்பை தத்ரூபணமாக படமாகியிருக்கிறார் இயக்குனர். அதே போன்று வனப்பகுதியில் மனிதர்களின் ஆக்கிரமிப்பால் வன விலங்குகளுக்கு ஏற்படும் இன்னல்கள் எடுத்துக்கூறும் வகையில் படமானது அமைந்துள்ளது. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் இப்படத்தில் பிரமாதமாகஇருந்தது. அதற்கு சாட்சிதான் இந்த படம் ஆஸ்கார் ஆவணக் குறும்படப் பிரிவில் விருதை தட்டி தூக்கியுள்ளது.

Advertisement