ஐஸ்வர்யா மோதிர விரலில் பச்சை குத்தியிருக்கும் “கோபி” யார்..? ஆர்த்தி வெளியிட்ட தகவல்

0
1148
aarthi
- Advertisement -

கோபி என்கிற பெயரை தன் விரலில் பச்சை குத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா. தமிழ்நாட்டிலேயே தனக்கு நெருக்கமான நண்பர் இவர் என்கிறார். யார் இந்தக் கோபி?பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதனால், ட்விஸ்ட், சர்ப்ரைஸ் என ஏதாவது ஒன்றை தினசரி அரங்கேற்றிக்கொண்டே வருகிறார் பிக்பாஸ்.

-விளம்பரம்-

Aishwarya

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய (23.9.2018) எபிசோடில் யாஷிகா ஆனந்த் மற்றும் இறுதிச் சுற்றுக்கு தேர்வான ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ஜனனி, ரித்விகா ஆகிய ஐந்து போட்டியாளர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் கமல்ஹாசன் முன்னிலையில் தொலைபேசியில் பேசியதைப் பார்த்திருப்பீர்கள். போட்டியாளர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருவதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். ஒருவருக்கொருவர் தெரியாதபடி அனைவரையும் அழைத்துப் பேசவைத்தார் கமல்.

யாஷிகா ஆனந்த், ரித்விகா, ஜனனி ஆகியோர் அவர்களின் அம்மாவிடமும் விஜயலட்சுமி தன் கணவரிடமும் பேசினார்கள். யாருடன் பேச வேண்டும் என்பது போட்டியாளர்களின் விருப்பமே.

-விளம்பரம்-

Aishwarya

இதில், மற்ற அனைவரையும் போல் இல்லாமல், ஐஸ்வர்யா மட்டும் வித்தியாசமாக அவரின் நண்பரான கோபி என்பவருடன் பேச விரும்பியதாகச் சொல்ல, அந்த நபருக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. “அம்மா, அப்பா, நளினி எல்லாம் எப்படி இருக்காங்க?” எனப் போனில் விசாரித்த ஐஸ்வர்யா, தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றியது குறித்தெல்லாம்கூட அந்த நண்பரிடம் பேசினார். அந்த நண்பரும் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சில நிமிடங்கள் பேசி முடித்ததும் அது குறித்து கமலிடம் விவரித்தபோது, “தமிழ்நாட்டில் தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் இவர்!'”என அந்த நபர் குறித்துத் தெரிவித்திருந்தார் அல்லவா… யார் இந்தக் கோபி என விசாரித்தோம்.

தமிழ்நாட்டிலேயே இவர் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்கிறார்… அதிலிருந்தே புரிந்துகொள்ள வேண்டாமா” என நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் ஐஸ்வர்யாவுக்கு நன்கு அறிமுகமான சிலர். இவர்கள் கொடுத்த இன்னொரு தகவல், பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயேகூட ஐஸ்வர்யாவின் இடது கை மோதிர விரலைக் கூர்ந்து கவனிச்சிருந்தீங்கன்னா, ‘கோபி’ பெயரைப் பச்சை குத்திருப்பதைப் பார்க்கலாம் என்பதே அது.

harathi

அட, ஆமாங்க. கோபி கூட பேசியபோதே அந்தப் பச்சையைத் தொட்டப்படியேதான் பேசினார் ஐஸ்வர்யா” என்கிறார்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் துல்லியமாகக் கவனித்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் சிலர்.

ஐஸ்வர்யா கையில் ‘கோபி என்கிற பெயர் பச்சை குத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவரிடம் பழகிய சிலரிடம் விசாரிக்கலாம் என நினைத்தபோது, பிக்பாஸ் வீட்டுக்குள் கடந்த சில நாள்களுக்கு முன்பு சர்பிரைஸ் விசிட் அடித்த, ‘பிக்பாஸ் சீஸன் ஒன்றி’ன் போட்டியாளர் நடிகர் ஆர்த்தி எதார்த்தமாக நமது லைனுக்கு வந்தார்.

ஐஸ்வர்யா விரலில் கோபி…’ என நாம் முடிப்பதற்குள்ளேயே, “பலபேர், அவங்க பொய் சொல்றாங்க’னு ஐஸ்வர்யாவைப் பற்றிச் சொன்னதை நானும்கூட நம்பலை. ஆனா, இப்போ நம்ப வேண்டியதா போச்சு. ஏன்னா, நானும் அவங்க கையில இருக்கிற பச்சையைப் பார்த்து, என்னனு கேட்டேனே! ஆனா, அதுக்கு அவங்க செமயா ஒரு பொய் சொல்லியிருக்காங்க. நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, அவங்க சொன்னது பொய்னு எனக்கும் தெரிஞ்சது. அதாவது, என்கிட்ட ‘கோபி’ங்கிறது என்னோட அம்மா பெயர்னு சொன்னாங்க. ‘ஆம்பளை பெயரா இருக்கே, அம்மானு சொல்றீங்க?’னு நானும் கேட்டேன். அதுக்கு, மழுப்பலா ஒரு பதிலைச் சொல்லிட்டுப் போனாங்க, அப்போ!” என்கிறார் ஆர்த்தி.

மோதிர விரலில் பச்சை குத்திட்டு, அம்மா ஸ்தானத்துல வெச்சிருக்கார்னா, அவர் ஐஸ்வர்யாவின் மிக முக்கியமான நண்பராகத்தான் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரட்டும், ஐஸ்வர்யாவிடமே கேட்டுவிடுவோம்!

Advertisement