நடிகர் விஜய்யை பற்றி புத்தகம் எழுதிய நபருக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி என்ன தெரியுமா ?

0
883

இளையதளபதி விஜய் ரசிகர்கள் மனதில் எந்த அளவிற்கு இடம்பிடித்திருக்கிறார் என்று கடந்த பிப்ரவரி மாதம் அவரது ரசிகர் ஒருவர் வெளியிருந்த புத்தகத்தின் மூலம் தெரிந்தது.

பிப்ரவரி 26 ஆம் தேதி விஜய் ரசிகர் நிவாஸ் என்பவர் ஐகான் ஆப் லேஜன்ட் என்ற விஜயின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.அந்த புத்தகம் அமேசான் ஷாப்பிங் தளத்தில் விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலே விற்று தீர்ந்தது.சமீபத்தில் இந்த புத்தகத்ததை படித்த விஜய் அதை எழுதிய நிவாஸுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.

அந்த நெகிழ்ச்சியான தருணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நிவாஸ்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளது தளபதி விஜய் எனக்கு போன் செய்து என்னை பாராட்டினார்.நான் நீங்கள் எழுதிய புத்தகத்தை படித்தேன் மிகவும் நன்றாக இருந்தது என்று கூறினார் என்று நிவாஸ் பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த புத்தகத்தின் வெற்றிக்கு விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நிவாஸ்.