டிடிஎஃப் வாசன் வீட்டில் மீண்டும் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியவில் சர்ச்சை நாயகனாக யூடியூபர் டிடிஎப் வாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும்போது ஏழைகளுக்கு உணவு மற்றும் சாப்பாடு உதவிகள் செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். இதனால் இவர் சீக்கிரமாகவே 2K கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார்.
இருந்தாலும், இவர் வண்டியில் அதிவேகமாகச் சென்று பிறரை பயமுறுத்துவதும், சாலை விதிகளை மீறுதல் என பல வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் இவரிடமிருந்து லைசன்ஸ் பறிக்கப்பட்டது. அதன் பின் டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் செல்அம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. அதற்குப் பிறகு இந்த படத்தை குறித்து எந்த ஒரு தகவலுமே வெளியாகவில்லை.
டிடிஎஃப் வாசன் குறித்த தகவல்:
பின் சில மாதங்களுக்கு முன் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர், இந்தப் படத்தில் கதாநாயகனாக டிடிஎப் வாசன் நடித்தார். அவரை இந்த படத்தில் இருந்து நீக்கி விட்டோம். வேறு ஒரு நடிகர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அது தொடர்பான தகவலையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கூடிய விரைவில் வெளியிடுவோம் என்றார். அதன் பின் இது தொடர்பாக மனவேதனையில் டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பின் இருவரும் மாற்றி மாற்றி புகார் அளித்து இருந்தார்கள். தற்போது இவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிடிஎஃப் வாசன் வீடியோ:
அதாவது, இவர் சமீபத்தில் கையில் பாம்பை வைத்துக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் அதில் லைசன்ஸ் வாங்கி பாம்பை வளர்த்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. இதனால் பிராணிகள் இருந்த கடையிலிருந்து அரியவகை ஆமை உள்ளிட்ட சில உயிரினங்களை எல்லாம் வனத்துறையினர் கைப்பற்றி இருந்தார்கள். லைசன்ஸ் வைத்திருந்தாலும் பாம்பை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது சட்டப்படி குற்றம் என்று வனத் துறையினர் கூறியிருந்தார்கள். இது தொடர்பாக டிடிஎஃப் வாசனிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி இருந்தார்கள்.
டிடிஎஃப் வாசன் சர்ச்சை:
அதன் பின் இது தொடர்பாக வேதனையில் டிடிஎப் வாசன் வெளியிட்ட வீடியோவில், உங்கள் எல்லோருக்கும் நடப்பது என்னவென்று நன்றாகவே புரியும். புதிதாக ஒரு வீடியோவை பதிவிட்டால் அது தொடர்பாக தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி என்னதான் என் மீது உங்களுக்கு வெறுப்பு என்று எனக்கு தெரியவில்லை. உண்மையில் இது ரொம்ப ரொம்ப தவறான விஷயம். ஏன் இவ்வளவு தவறான செய்திகளை வெளியிட்டு என் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்கிறீர்கள். மக்கள் மத்தியில் ஏன் என்னை கெட்டவன் போல காட்ட முயற்சிக்கிறீர்கள்? நீங்கள் நன்றாக இருங்கள். கர்மா என்ற ஒன்று இருக்கிறது. கர்மா இஸ் பூமரங். யாரையுமே சும்மா விடாது. மக்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு கிடைத்த அன்றிலிருந்து இப்போது வரை பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது.
மீண்டும் போலீஸ் சோதனை:
எல்லாவற்றையும் நான் சட்டபடியாக செய்துமே என் மீது வழக்கு பதிவு செய்வது என்ன நியாயம்? என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருந்தார். இந்த நிலையில் டிடிஎப் வாசன் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி இருக்கும் தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் டிடிஎஃப் வாசன் வீடு இருக்கிறது. இங்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறார்கள். பின் சோதனை இறுதியில் வாசன் வீட்டில் எந்த ஒரு வனவிலங்குகள் இல்லை என்பதை சென்னை வனத்துறைக்கு தெரிவித்து இருக்கிறார்கள்.