தி கேரளா ஸ்டோரி சர்ச்சை முடிவதற்குள் அடுத்த சர்ச்சையை கிளப்பிய திப்பு சுல்தான் டீசர்.

0
414
Tippu
- Advertisement -

தி கேரளா ஸ்டோரி படத்தின் அதிர்வுகள் முடிவதற்கு முன்பே திப்பு சுல்தானின் டீசர் சோசியல் மீடியாவில் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்தானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார். இந்த படம் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள் என்றும் ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் இந்து-கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார்கள்.

- Advertisement -

தி கேரளா ஸ்டோரி படம்:

இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது. அதோடு இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்கள். ஆனால், விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் மீறி இந்த படம் வெளியாகியிருந்தது.

படம் குறித்த தகவல்:

மேலும், வெளியான முதல் நாளிலேயே இந்தியா முழுவதும் இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அதோடு பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் இந்த படத்துக்கு வரி விலக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திப்பு சுல்தான் படத்தின் டீசர் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

திப்பு சுல்தான் படம்:

பவன் ஷர்மா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஈராஸ் இண்டர்னெஷனல், ராஷ்மி ஷர்மா ஃப்லிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. திப்பு சுல்தான் ரோலில் நடிகர் சந்தீப் சிங் நடிக்கிறார். முகலாய மன்னர்களில் ஒருவரான மைசூரின் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் டீஸர் தான் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த டீசரில் 8000 கோயில்களும், 27 கிறிஸ்துவ திருச்சபைகளும் அளிக்கப்பட்டு இருக்கிறது.

டீசர் குறித்த சர்ச்சை:

40 லட்சம் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டு மாட்டு கறி உண்ண கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் சிறை பிடிக்கப்பட்டு இருக்கின்றனர். கோழிக்கோட்டில் 2000 பிராமண குடும்பங்கள் அழிந்து இருக்கின்றனர். இது வெறி பிடித்த திப்பு சுல்தானின் கதை என்ற வசனங்களுடன் திப்புசுல்தான் முகத்தில் கறியை பூசுவது போல் காட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த டீசர் தான் இணையத்தில் புது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக தி கேரளா ஸ்டோரி ஏற்படுத்திய அதிர்ச்சி மறைவதற்குள்ளே தற்போது திப்புசுல்தானின் டீசர் புதிய சர்ச்சை கிளப்பி இருக்கிறது.

Advertisement