பல கேலிகள், நெகடிவ் விமர்சங்களுக்கு மத்தியிலும் வசூலில் பிரபாஸ் படத்தையே பின்னுக்கு தள்ளியது ‘தி லெஜண்ட்’

0
420
thelegend
- Advertisement -

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் அருள் சரவணன் நடிப்பு மற்றும் தயாரிப்பில், ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜன்ட் திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இசையமைத்திருக்கிறார். எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் படத்தை ஜூலை மாதம் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகள் வெளியாகியது. தமிழில் தயாரான இந்த படம் தற்போது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானி பான் இந்திய படமாக மாறியுள்ளது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஹீரோ என அறிமுகமாகும் அருள் சரவணன் இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களை சந்தித்துவருகிறது.

-விளம்பரம்-

அதிகாலை காட்சியில் பெரும்மளவிளான திரையரங்கம் ஹவுஸ்புல் :-

இந்த கடையின் உரிமையாளர் அருள் சரவணன், தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார். இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில், சரவணா ஸ்டோர்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் என்ற பெயரில் தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் அந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் என வெளியாகி முப்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருந்த நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களிலும் தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களிலும் ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காலை நான்கு மணி காட்சிகள் எல்லாம் சுமார் 650 தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன.

- Advertisement -

தி லெஜன்ட் படத்தில் முதல் நாள் வசூல் :-

பான் இந்திய திரைப்படமாக 5 மொழிகளில் வெளியான தி லெஜண்ட் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் 1.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாகவும், உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வார இறுதி நாட்களில் தி லெஜண்ட் படத்துக்கு வரும் வசூலை பொறுத்துத்தான் அதன் வெற்றித் தோல்வி முடிவாகும் என்கின்றனர். மேலும் படத்தில் ஹரிஸ் ஜெயராஜின் இசை மற்றும் வேல்ராஜூன் ஒளிப்பதிவை தவிர மற்ற எதுவும் சிறப்பாக இல்லை என்று ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில், பாலிவுட்டில் நடித்து பாராட்டுக்களை பெற்ற நடிகை ஊர்வசிக்கு தமிழில் சிறப்பாக அறிமுகம் கிடைக்கவில்லை. தனது நடிப்பு மற்றும் நடனத் திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை. நடிகை-மாடல் அழகி போட்டியில் ஆர்வம் கொண்ட ஊர்வசி, அழகி போட்டியில் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் பாலிவுட் படத்தில் நடித்து நடிப்புக்காக பாராட்டுக்களை பெற்ற அவர் தற்போது தமிழில் தனது அறிமுகப்படத்தில் கோட்டைவிட்டுள்ளார். அதே சமயம் தி லெஜன்ட் படத்தில் நடித்ததற்காக ஊர்வசி சரூ 20 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

பிரபாஸ் படத்தின் சாதனையை முறியடித்த லெஜன்ட் :-

இந்நிலையில், கேரளாவில் தி லெஜண்ட் திரைப்படம் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. பிரபாஸ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம். பான் இந்தியா படமாக வெளியிடப்பட்ட இப்படம் பிரபாஸின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இப்படம் கேரளாவில் ரிலீசான முதல் நாளில் ரூ.4 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்ததாம். தற்போது சரவணன் நடிப்பில் வெளியாகி உள்ள லெஜண்ட் திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ.4.7 லட்சம் வசூலித்து பிரபாஸ் படத்தையே பின்னுக்கு தள்ளி உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. 40 முதல் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு முதல் நாளிலேயே 2 கோடி வசூலை இந்த படம் ஈட்டியுள்ளது. பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடிப்பில் 80 கோடி பட்ஜெட்டில் வெளியான தாகத் திரைப்படம் முதல் நாளில் வெறும் 40 முதல் 50 லட்சம் மட்டுமே வசூல் ஆனது. ஒட்டுமொத்தமாகவே 3 கோடி வரை தான் வசூல் செய்து டிசாஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

படம் பார்த்தவர்களின் விமர்சனங்கள் :-

அதிகாலை காட்சியை பார்த்துவிட்டு பலரும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது தி லெஜன்ட் படம். சிலர் அண்ணாச்சியின் முயற்சியை பாராட்டி இருக்கின்றனர். சிலர் அவர் நடிப்பை கழுவி ஊற்றி வருகின்றனர். உங்கள் நண்பர்கள் குழு உடன் போங்கள், சத்தமாக சிரியுங்கள், இந்த படம் மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர், உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் சுமாராக இருக்கிறது என்றும், பல இடங்களில் போர் அடிப்பதாகவும், 3 மணி நேரம் நன்றாக தூங்கலாம் என்றும் கருத்து கூறினர். சிலர் பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் சிரிப்பு தான் வருகிறது என்றும் கூறினர். அதிலும் ஒரு தனியார் யூடியுப் சேனல் தொகுப்பாளர் செல்கிறார் ” ஜட்டி என்பது உள்ளே போடும் உள்ளாடை பட்டுவில் ஜட்டி செய்யப்பட்டிருக்கு என தலையில் போட முடியுமா ” என கேட்டிருந்தார்.

படத்தை வாங்க வந்தவர்கள் விலையை கேட்டு ஒடினார்கள் :-

அது என்னவென்றால் அந்தப் படத்தின் டிரைலர் சுமார் 26 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது. மேலும், நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெறும் 24 மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வலிமை திரைப்படம் வந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. இவ்வாறாக சமூகவலைத்தளங்களில் வைரலான படமாக இருந்து வந்த “தி லெஜெண்ட்”படம் தற்போது ரிலீஸ்ஸிற்கு தயாராகி வருகிறது. படத்தை அதிக விலைக்கு விற்று லாபத்தை பார்த்து விட வேண்டும் என அண்ணாச்சி திட்டம் போட்டுள்ளார். அதனால் படத்தை வாங்க வந்தவர்களிடம் அதிக விலையை கேட்டுள்ளார். ஆனால் படத்தை வாங்க வந்தவர்கள் எந்த ஒரு பதிலும் கூறாமல் வந்த வழியே திரும்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.

Advertisement