பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக இருப்பது சினிமா. சினிமா என்பது உலகில் உள்ள பல மொழிகளில் உருவாகி வருகிறது. அந்த வகையில் பல மொழிகளில் உருவாகி வரும் படங்களில் ஒரு சில படங்கள் மட்டும் தான் நம் மனதை விட்டு நீங்காமல் என்றென்றும் இருக்கும். அதோடு சினிமா படங்களை ரசிப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் சினிமா ரசிகர்கள் ஒரு மொழி படங்கள் மட்டுமில்லாமல் பல மொழியில் உருவாகும் படங்களை பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது தாய்லாந்து நாட்டில் உருவான மீடியம் என்ற படம் தான் ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அப்படி என்ன மீடியம் படம் ரசிகர்களை பீதியில் ஆழ்த்தியது என்பதைப்பற்றி பார்க்கலாம்.
பாயோன் என்ற கடவுள் ஒரு குடும்பத்தை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் பரம்பரை பரம்பரையாக அந்த கடவுள் பெண்கள் மீது வருவதாக கூறுகின்றனர். இதை ஒரு குரூப் டாக்குமென்ட்ரி செய்வதற்காக அந்த குடும்பத்தின் வீட்டிற்கு செல்கிறது. அப்போது டாக்குமெண்டரி செய்ய சென்ற இடத்தில் பயத்தில் உறைய வைக்கும் பல காட்சிகள் நடக்கின்றது. பாயோன் கடவுளாக இருக்கும் பெண் அவருடைய குடும்பத்தில் ஒரு பெண்ணின் மீது ஆவி இருக்கிறது. அந்த ஆவி குடும்பத்தில் உள்ள எல்லோரையும் கதிகலங்க வைக்கிறது. அந்த ஆவி குடும்பத்தை மட்டும் இல்லாமல் படத்தை பார்க்கும் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. அதிலும் இந்த படத்தை கடைசி ஒரு மணி நேரம் வரும் காட்சிகள் வேற லெவல்.
பார்ப்போரை அச்சத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அது மட்டும் இல்லாமல் இந்த கடைசி ஒரு மணி நேரம் படத்தைத் தனியாகப் பார்த்தால் ஒரு கோடி ரூபாய் பணம் என்று சவால் விடும் அளவிற்கு காட்சிகள் உள்ளது. வழக்கம் போல் பேய் படம் என்றால் கதையில் அதை டாக்குமெண்டரி செய்வது, அங்கு நிலவும் பேய் காட்சிகள் என்று தான் அனைவரும் நினைத்திருப்பார்கள். ஆனால், படத்தின் கதையின் உள்ளே செல்ல செல்ல நாமும் அதை நோக்கி நகர்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பின் படத்தின் கடைசி காட்சிகள் எல்லாம் ஒரே ரத்தக்களறி சொல்லலாம்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் திகில், பயம், அச்சம், ரத்தம் என்று பயங்கரமாக இருக்கிறது. பார்க்கும் போது நெஞ்சு திக் திக்கென்று தூக்கி போடும் அளவிற்கு காட்சிகள் உள்ளது. இந்த படம் எல்லோருக்கும் பீதியை கிளப்பும் வகையிலும் அனுபவத்தை தரும் வகையிலும் உள்ளது. உண்மையாலுமே இந்த படத்தை இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பார்க்காதிருத்தல் நல்லது என்று கூறுகிறார்கள். இதுதாண்டா உண்மையான பேய் படம் என்றும் சொல்லும் அளவிற்கு மீடியம் படத்தை எடுத்துள்ளார்கள். தற்போது இந்த படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.